பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 31 10. இனிய சொற்களைப் பேசுதல் அன்பு கலந்து வஞ்சனை இல்லாதவனாகி, உண்மைப் பொருள் உணர்ந்த உயர்ந்தோர் வாயினின்றும் வெளிப்படும் சொற்கள் இன்சொற்கள் எனப்படும். 91 முகமலர்ந்து இன்சொல் பேசுபவனாக விளங்கின், உளங் குளிர்ந்து ஒன்று கொடுத்தலினும் சிறந்தது. 92 முகத்தால் மகிழ்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளத் தோடு தோய்ந்து வரும் இன்சொல் பேசுவதே அறம், 93 எல்லோரிடத்தும் இன்பமளிக்கும் இன்மொழியே பேசுபவர்க்கு, துன்புறுத்தும் துய்க்க முடியா ஏழ்மை இராது. 9.4 பணிவு உடையவனாகவும் இன்சொல் பேசுபவனாகவும் இருத்தலே ஒருவனுக்கு நல்லணி; மற்ற பிற அணிகள் அணிகளாகா. 95 நல்லனவற்றில் நாட்டங் கொண்டு இனிய சொற்களைப் பேசின், தீயவை அழிய அறம் வளரும். 96 கேட்பவர்க்குப் பயன் விளைத்து நற்பண்பினின்றும் விலகாது பேசும் இன்மொழி, பேசுபவர்க்கும் இன்பம் ஈந்து நன்மையும் அளிக்கும். 97 சிறுமைப்படுத்தும் கீழ்த் தன்மையிலிருந்து விலகிய இன்மொழி, பேசுபவர்க்கு மறுவுலகிலும் இவ்வுலகிலும் இன்பம் கொடுக்கும். 9 8 இன்சொல் இன்பம் தருதலை நேரில் காண்பவன், அதை விட்டு, துன்பம் தரும் வன்செரில் பேசுவது எதற்காகவோ? 99 இனிய சொற்கள் இருக்க அவற்றைப் பேசாமல் இனிமையற்ற கடுஞ் சொற்களைப் பேசுதல், இனிய பழம் இருக்கவும் காயை விரும்பிப் பறித்து உண்பது போலாம். 1 O O