பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 அறம் 11. செய்ந்நன்றி அறிதல் செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது. 101 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. 102 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. 1O3 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். 104 உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 1O5 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. 1O6 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. - 1Ο7 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. 1O8 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 11O