பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இல்லறவியல் 35 12. நடுநிலை உடைமை ஒவ்வொரு துறையிலும் முறையுடன் கூடி நடந்து கொண்டால்தான், நடுவு நிலைமை என அழைக்கப்படும் ஒரு பண்பு நல்லதெனப் பெயர் வாங்கும். 1 11 யார்மாட்டும் நடுநிலை உடையவனது செல்வம் அழியா மல் அவன் வழித் தோன்றல்கட்கும் காப்பளிக்கும். 112 நடுநிலை தவறிப் பெறத்தக்க செல்வம் நன்மையே தருமாயினும் (தராது) அச் செல்வத்தை அப்போதே கைவிடுக. 11 G நேர்மையாளர், நேர்மையில்லாதவர் என்பது, அவரவர் தமக்குப் பின் விட்டுச் சென்றிருப்பவைகளால் அறியப்படும். 114 அழிவும் ஆக்கமும் வாழ்க்கையில் வாராதவையல்ல; எனவே உள்ளத்தில் கோணா உறுதி கொள்ளலே உயர்ந் தோர்க்கு அழகு. 115 நெஞ்சில் நேர்மையைத் துறந்து தீயன செய்தால் நான் கெட்டு விடுவேன் என்பதை ஒருவன் அறிவானாக. 116 நடுநிலையுடன் நன்னெறியில் ஒழுகுபவனது தாழ்ந்த ஏழ்மையை, உண்மையில் ஒரு கேடாக உலகம் எண்ணாது. 117 தன்னையும் சமப்படுத்திப் பொருளின் அளவையும் ஒழுங்காக வரையறுக்கும் துலாக்கோல் போல் விளங்கி ஒருவர்க்கு ஒருவிதமாய்ச்சாயாதிருத்தலே சான்றோர்க் கழகு. 11.8 ஒருசேர உள்ளத்திலும் கோணல் இல்லாதிருந்தால்தான், சொல்லில் கோணல் இல்லாமல் பேசுவது நடுவு நிலைமை யாகும். 119 பிறர் பொருளையும் தம் பொருள்போல் போற்றி ஒழுகினால்தான் வாணிகம் நடத்துபவர்க்கு அவ்வாணிகம் செழிக்கும். 12O