பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ல்லறவியல் 39 14. நல்லொழுக்கம் உடைமை ஒழுக்கமே உயர் சிறப்பு அளிப்பதால், அவ்வொழுக் த்தை உயிரினும் உயர்ந்ததாகப் போற்ற வேண்டும். 131 ஒழுக்கத்தைப் பாடுபட்டுப் பேணிக் காப்பீராக! எப்படி ஆய்ந்து போற்றித் தேர்ந்து நோக்கினும் அவ்வொழுக்கமே உயிர்க்கு நற்றுணை. 1 32 ஒழுக்கம் உடைமையே உயர்குடிப் பிறப்பின் இயல்பாகும். இழுக்கமோ (ஒழுக்கம் இன்மையோ) இழிகுடிப் பிறப்பின் இயல்பே யாகும். 133 மறையை (வேதத்தை) மறந்தாலும் மறுபடியும் படித்துக் கொள்ளலாம்; ஆனால் மறையோதும் பார்ப்பனனது குடிப்பிறப்பு ஒழுக்கம் குன்றினால் கெட்டு விடும். 1. 34 பொறாமை யுடையவனிடத்தில் வளர்ச்சி இல்லாதது போல் ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இராது. 1 35 திண்ணிய அறிவாளிகள் ஒழுக்கக் கேட்டால் குற்றம் விளைவதறிந்து நல்லொழுக்கத்தினின்றும் தளராது நிற்பர்.

  • , 1. 36

எவரும் ஒழுக்கத்தால் உயர்புகழ் அடைவர்; இழுக்கத்தாலோ அடையக் கூடாத பழியை அடைவர். 137 நல்லொழுக்கம் நன்மை விளைவதற்கு இட்ட விதையாகும் தீ யொழுக்கமோ என்றென்றும் துன்பமே விளைக்கும். 1 38 தீய சொற்களைத் தவறியும் தம் வாயாற் பேசுதல் நல்லொழுக்கம் உடையோர்க்கு இயலாது. 1 39 பல கலைகள் கற்றிருப்பினும் உலகத்தோடு ஒட்டி நடத்தலைக் கல்லாதவர்கள் அறிவில்லாதவர்களே. 140