பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இல்லறவியல் 43 16. பொறுமை உடைமை தன்னைத் தோண்டுபவரையும் தாங்கிக் காக்கும் நிலத்தைப் போல், தங்களை இகழ்ந்து பேசுபவரையும் பொறுத்துக் கொள்ளுதல் தலையாய பண்பு. 151 பிறர் முறை கடந்து செய்யும் தீமையை எப்போதும் பொறுத்துக் கொள்க; அத்தீமையை அப்போதே மறந்து விடுதல் பொறுத்தலினும் நல்லது. 152 ஏழ்மைக்குள் கொடிய ஏழ்மையானது விருந்தினரை விலக்குதலாம். வலிமைக்குள் மிக்க வலிமையாவது அறிவிலிகளைப் பொறுத்து மன்னித்தலாம். 153 முழு நிறைவு நீங்கா திருக்க வேண்டின், பொறுமையைப் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும். 15.4 தீமை செய்தவரைப் பதிலுக்கு வருத்தியவரை உலகினர் ஒரு பொருளாகப் போற்றார் வருந்தாது பொறுத்தவரையோ, பொன்போல் போற்றி உள்ளத்தில் பதித்துக் கொள்வர். 155 பொறுக்காது ஒறுப்பவருக்கு அன்றொரு நாளைக்குத்தான் மகிழ்ச்சி, பொறுத்தவர்க்கோ உலகம் அழியும்வரையும் புகழ் நிலைக்கும். 156 முறையற்ற பொல்லாங்குகளைத் தனக்குப் பிறர் செய்தாலும், அதற்காக அவர்க்கு வரும் துன்பத்திற்கு வருந்தி, தான் அறமல்லாத தீமைகளைப் பதிலுக்குச் செய்யாமையே நல்லது. 157 இறுமாப்பால் மீறிய தீமைகள் செய்தவரைத் தாம் தமது பொறுமைச் சிறப்பால் வென்று விடுக. 158 அளவு கடந்து நடப்பவ்ரின் வாயிலிருந்து வரும் இனிமையற்ற கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறவிகளினும் தூயவர் ஆவர். 1.59 பிறர் பேசும் கடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கு அடுத்தபடியாகவே, உண்ணாமல் நோற்கும் நோன்பிகள் பெரியராவர். 160