பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 47 18. பிறர் பொருளைக் கவர விரும்பாமை நடுநிலை தவறிப் பிறரது நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால், அவனது குடியை அழித்துக் குற்றச்சாட்டை யும் அப்போதே கொடுக்கும். 171 நடுநிலை தவறுதலுக்கு நாணியஞ்சுபவர், திருட்டு வழியில் வரும் பயனை விரும்பிப் பழிச் செயல்கள் செய்யார். 172 மற்ற பேரின்பத்தை விரும்புபவர் தீய சிற்றின்பத்தை விரும்பி அறமல்லாச் செயல்கள் புரியார். 173 ஐம்புலங்களை வென்ற சிறுமையற்ற பேரறிவாளர் யாம் ஒன்றும் உடைத்தாயில்லோம் என்று கருதிப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார். 174 யாரிடத்தும் உள்ள பொருளை விரும்பி வீண் செயல்கள் புரிந்தால், நுணுகி விரிந்த அறிவினால் என்ன பயனாம்? 175 அருளை விரும்பி நன்னெறியில் ஒழுகத் தலைப்பட்ட வன், இடையே பிறர் பொருளை விரும்பிப் பொல்லாதன புரிய எண்ணினால் கெட்டு விடுவான். 176 பிறர் பொருளைக் கவர்வதால் வரும் செல்வத்தை விரும்பற்க அச்செல்வம் விளைவளிக்கும்போது பயன் சிறத்தல் இயலாதாம். 177 செல்வத்திற்குச் சுருக்கம் இன்மை என்பது எது வெனில், பிறன் கைப்பொருளை விரும்பாதிருக்க வேண்டுவதே.178 அறம் உணர்ந்து பிறர் பொருளை விரும்பாத அறிஞரை அடையும் வகையறிந்து அப்போதே திருமகள் சென்றடைவாள். - 179 ஆராயாது பிறர் பொருளை விரும்பின் அவ்விருப்பம் அழிவைத் தரும். பிறர் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வாழ்க்கைக்கு வெற்றியளிக்கும். 18 O