பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அற! 21. தீவினையச்சம் தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. 2O1 தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். 2O2 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். 2O3 மறந்தும் பிறன்கேடு சூழற்த சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. 2O4 இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. 2O5 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். 2O6 எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். 2O7 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று. 2O8 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். 2O9 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். 21 O