பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 55 22. உலகொடு ஒத்து உதவி வாழ்தலை அறிதல் நீர் உதவும் மழைக்கு உலகம் என்ன பதிலுதவி செய்கிறது? எனவே, தம் கடமையெனப் பிறர்க்குச் செய்யும் உதவிக்குப் பதிலுதவி வேண்டியதில்லை. 211 ஒருவன் முயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம் தகுந்தவர்க்கு உதவி செய்தற் பொருட்டேயாம். 212 பிறர்க்கு உதவி ஒத்து வாழ்வதினும் சிறந்த பேறுகளைத் தேவர் உலகத்திலும் சரி - இவ்வுலகத்திலும் சரி, பெற முடியாது. 21 o ஒப்புரவு அறிந்தவனே உயிர் வாழ்பவனாகக் கருதப்படுவான்; அங்ங்ணம் வாழாத மற்றவன் இறந்தவருள் ஒருவனாக வைத்தே எண்ணப்படுவான். 214 உலகம் விரும்பும் பெரிய அறிவாளி செல்வம் பெற்றிருப்பது, ஊரார் நீருண்ணும் குளம் நீர் நிரம்பி யிருப்பது போன்றது. 215 ஒப்புரவாம் நலம் உடையானிடத்துச் செல்வம் உண்டானால், அது, பயன்மிக்க மரம் ஊர்க்குள்ளே பழம் பழுத்திருப்பது போன்றதாம். 2 1 Ꮾ பெருந்தன்மை உடையவனிடம் செல்வம் சேரின், அது, தன் உறுப்புக்கள் பலவும் மருந்தாகி ஒன்றும் வீணாகாமல் பயனளிக்கும் மரம் போன்றதாம். 217 உதவும் கடமையை உணர்ந்த நல்லறிவாளர்கள் உதவ வாய்ப்பில்லாத போதும் உதவுவதற்குச் சோர மாட்டார்கள். 218 ஒப்புரவாம் நலம் உடையவனாயிருந்தவன் ஏழையாகுதல் என்பது (என்ன தெரியுமா) தான் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்ய முடியாமையால் மனம் அமைதி பெறா நிலைதான். 219 ஒப்புரவு செய்வதால் கேடு நேரும் என்றால், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாயினும் பெற்றுக் கொள்ளத் தக்கதாம். 22 O