பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 59 24. புகழ் ஏழைகட்குக் கொடுப்பீராக கொடுத்துப் புகழ் பெற வாழ்வீராக; அப்புகழைத் தவிர உயிருக்கு உறுபயன் வேறில்லை. 231 (உலகில் கும்பலாகக் கூடிப்) பேசுபவர் பேசுபவை யெல்லாம், இரந்தவர்க்கு ஒன்று ஈந்தவரிடம் நிலைத்து நிற்கும் புகழைப் பற்றித்தான். 232 எதுவும் நிலைத்துத் தங்காத உலகத்திலே, சிறந்த புகழைத் தவிர, அழியாது நிலைத்து நிற்கக் கூடியது வேறொன்று மில்லை. 233 ஒருவர் நிலவுலகில் நெடிது நிற்கும் புகழ்ச் செயல் புரிந்தால், அவரைத் தவிரப் புலவர்களைக் கூட விண்ணுலகம் போற்றி மதிக்காது. 2 3 4. புகழ் என்னும் ஆக்கத்தை அளிப்பதான பொருள் இழப்பும், செத்தாலும் புகழுடம்புடன் வாழ்வதாகவே கருதக் கூடியதான சாவும் திறனுடையோர்க்கன்றி மற்றவர்க்குக் கிடைப்பதரிது. 235 பிறந்தால் புகழ்ச் செயல் புரிபவர்களாகப் பிறக்க வேண்டும்; அது முடியாதவர்கள், பிறந்ததை விடப் பிறவாதிருந்திருந்தாலே நல்லது. 236 புகழ் பெற வாழத் தெரியாதவர்கள் அதற்காகத் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்பவரை நோவது எதற்காக? 237 தனக்குப் பிற்காலம் எஞ்சியிருக்கும் புகழ் என்னும் எச்சத்தை ஒரே ஒருவன் பெறாவிட்டாலும், உலகத்தார் அனைவர்க்குமே இகழ்ச்சி என்பர் அறிஞர். 238 புகழ்ச் செயல் புரியாதவரின் உடலைச் சுமந்த மண் பழியற்ற வளமான விளைவு இன்றிக் குன்றி விடும். 239 இகழ் நீங்க வாழ்பவரே உண்மையில் உயிர் வாழ்பவர்; புகழ் போக வாழ்பவரே உயிர் வாழாதவர். 24 O