பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 61 25. உயிர்களிடம் பேரிரக்கம் உடைமை அருளுடைமையாகிய செல்வம் செல்வங்களுள் சிறந்ததொரு செல்வமாகும். பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்துந்தான் உள்ளன. 241 நன்முறையில் ஆராய்ந்து அருளைக் கையாள்வீராக பல வழிகளில் ஆராய்ந்து நோக்கினும் அவ்வருளே உயிர்க்குத் துணை. 242 இருள் பொருந்திய துன்ப (நரக) உலகை அடைதல், அருள் பொருந்திய உள்ளம் உடையார்க்கு இல்லை. 243 உலகில் உள்ள பிற உயிர்களைப் பேணி அருள் செலுத்துபவனுக்குத் தன் உயிர் அஞ்சும்படியான கெடுவினை நேராது என்பர். 244 அருளுடையவர்க்குத் துன்பம் நேராது; காற்று வீசும் வளமான இப்பெரிய உலக நிகழ்ச்சிகள் பல அதற்குச் சான்று. 2.45 பொருள் இன்றி வாழ்க்கையில் நெகிழ்ந்தவர் என்று சொல்லப்படுபவர், அருள் இன்றித் தீமைகளைச் செய்து ஒழுகியவராவர். 246 பொருள் இல்லாதவர்க்கு இந்த உலக இன்பம் இல்லாததுபோல, அருள் இல்லாதவர்க்கு அந்த வீட்டுலக (முக்தி) இன்பம் இல்லை. 2.47 பொருள் அற்றவர் இன்னொரு காலம் செல்வம் பூத்துப் பொலிவர் அருள் அற்றவரோ அற்றவர் அற்றவரே; மற்று ஒரு காலமும் அவர் வளர்தல் என்பது இல்லை. 248 உண்மையில் அருள் இல்லாதவர் செய்யும் போலி வெளிப்பகட்டு அறம், அறிவுத் தெளிவு இல்லாதவன் உண்மைப் பொருள் உணர்ந்த தன்மை போன்றது. 249 ஒருவன் தன்னினும் மெலிந்தவரைத் தாக்கச் செல்லும்போது, தன்னினும் வலியவர்முன் தன் நிலை எத்தகையது என்று எண்ணிப் பார்ப்பானாக. 250