உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரையாசிரியர் உரை 'திருக்குறள் தெளிவுரை என்னும் பெயரில் 1948 ஆம் ஆண்டிலும், 'திருக்குறள் தெளிவு என்னும் பெயரில் 1949 - ஆம் ஆண்டிலுமாகக் குறள் உரை விளக்க நூற்கள் சில யான் எழுதி வெளியிட்டுள்ளேன். பின்னரும் வெவ்வேறு ஆண்டுகளில் சில நூற்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. இவையனைத்தும், குறிப் பிட்ட சிற்சில குறள்களின் விளக்க வெளியீடுகளே. ஆனால், மிக விரிவான விளக்கம் உடையவை. இப்போதோ, 'திருக்குறள் தெளிவு" என்னும் பெயரில் திருக்குறள் முழுவதற்கும் சுருங்கிய அளவில் தெளிவான கருத்துரை வழங்கும் இந்நூலை எழுதி வெளியிடுவிக்கிறேன். இந்நூல் ஒரு திங்கள் கால அளவுக்குள் எழுதப்பட்டு அச்சும் முடிக்கப்பட்டு விட்டது. திருக்குறளுக்கு அன்றுதொட்டு இன்றுவரை பல உரைகள் வெளிவந்துள்ளன. எனது உரையும் வருகிறது. படித்துக் கருத்து அறிவிக்க வேண்டுகிறேன். சுந்தர சண்முகன் 28.8.1966