பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 73 31. சினம் கொள்ளாமை செல்லக் கூடிய இடத்திலே சினம் வராமல் தடுப்பவன் தான் உண்மையில் சினம் காப்பவனாவான். செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாமற் போனால் என்ன? 301 செல்லாத வலியவரிடத்திலே சினம் காட்டுதல் தீமை தரும் செல்லக் கூடிய எளியவரிடத்திலும் சினத்தலினும் தீய செயல்கள் வேறில்லை. 3 O2 எவரிடமும் சினத்தை மறந்துவிடுக. அச்சினத்தால் தீமையே பிறக்கும். 303 சிரிப்பையும், களிப்பையும் அழிக்கினற சினத்தினும் கொடிய பகையும் வேறு உண்டோ? 3 O 4 ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் தனக்குச் சினம் வராமல் தடுத்துக் காப்பானாக காக்கா விடின் அச்சினம் தன்னையே அழிக்கும். SO 5 சேர்ந்தாரைக் கொல்லும் சினம் என்னும் நெருப்பு தன் இனத்தாராகிய இன்பக்காவல் தெப்பத்தைச் சுட்டெரிக்கும். SO 6 சினத்தை ஒரு பொருளாகக் கொண்டவன் கெடுதல். தரையைத் தாக்கி அறைந்தவனுடைய கை தவறாது கெடுவது போன்றது. 3O7 பல கிளைகள் விட்டெரியும் நெருப்பில் தோய்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்தாலும், முடியுமானால் அவனைச் சினவாமையே சிறந்தது. 308 ஒருவன் நெஞ்சில் சினத்தை நினையாதிருந்தால், அவன் நினைத்த நன்மைகள் யாவும் உடனே கைகூடும். こ09 அளவிறந்து சினங்கொண்டவர் செத்தவர்க்கு நேர் ஆவர்; சினத்தைத் துறந்தவரோ துறவிகட்கு ஒப்பாவர்.310