பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 75 32. துன்பம் செய்யாமை பிறர்க்குத் துன்பம் செய்வதால் சிறப்பளிக்கும் செல்வம் பெறலாமானாலும், துன்பம் செய்யாதிருத்தலே குற்றமற்ற தூயோரது கொள்கை. 3.11 ஒருவர் மிகச் சினந்து தமக்குத் துன்பம் செய்த போதும், திரும்ப அவருக்குத் துன்பம் செய்யாதிருத்தலே குற்றமற்ற தூயோரது கோட்பாடு. 312 தாம் துன்பம் செய்யாதிருக்கவும் தமக்குத் துன்பம் செய்தவர்க்கும் திரும்பத் துன்பம் செய்தால் பிறகு தப்ப முடியாத துன்பம் விளைக்கும். 313 துன்பம் செய்தவரைத் தண்டித்தல் என்பது, (இப்பேர்ப்பட்டவர்க்குத் துன்பம் செய்து விட்டோமே என்று) அவர் வெட்கப்படும்படியாக அவருக்கு நல்ல நன்மைகளைச் செய்து விடுவதுதான். こ 14 வேறு ஒர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதிக் காவாதபோது அறிவு பெற்றதனால் ஆகக் கூடிய பயன் உளதோ? 315 துன்பத்திற்குரியவை எனத் தான் பட்டறிந்தவற்றைப் பிறனிடம் செய்வதை மேவாதிருக்க வேண்டும். 316 எவ்வளவு சிறிதும் எப்பொழுதும் எவர்க்கும் மனம் அறிந்ததான துன்பத்தைச் செய்யாதிருத்தலே சிறப்பு. 317 தன் உயிருக்குத் துன்பம் என்பதாக உணர்பவன் பிற உயிர்க்குத் துன்பம் செய்வது எதற்கோ? こ 18 முற்பகலில் பிறர்க்குத் துன்பம் செய்தால், பிற்பகலில் தங்கட்குத் துன்பங்கள் யாரும் செய்யாமலேயே தாமாகவே வந்து சேரும். 3.19 துன்பங்கள் எல்லாம் பிறர்க்குத் துன்பம் செய்தவரிடமே போய்ச் சேரும்; எனவே, துன்பம் இல்லா நிலையை விரும்புபவர் பிறர்க்குத் துன்பம் செய்ய மாட்டார். 320