பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 77 33. கொலை செய்யாமை அறச் செயல் யாதென்றால் எவ்வுயிரையும் கொல்லா திருத்தலாம்; கொல்லுதலோ, பிற தீச் செயல்கள் யாவற்றையும் உடன் விளைவிக்கும். 3.21. பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்துச் சாப்பிட்டு, பல உயிர்களையும் கொல்லாது காத்தல், மேலானவை என அறநூலோர் தொகுத்துச் சொல்லியிருக்கும் அறங்களுக்குள் எல்லாம் சிறந்தது. &22 கொல்லாமை தனியொரு நற்சிறப்பினதாம்; பொய் யாமை கூட அடுத்து அக் கொல்லாமையின் பிற் பட்டதாகவே நல்லது. 323 ல்வழி என்று சொல்லப்படுவது எது எனில், யாது ஒர் உயிரையும் கொல்லாமையை உயர்வாகக் கருதும் ஒழுக்கமாம். 324 உலக நிலை கண்டு அஞ்சிப் பற்றைத் துறந்தவர்க்குள் எல்லாம் கொலை செய்ய அஞ்சிக் கொல்லாமையை உயர்வாகப் போற்றுபவனே சிறந்தவன். さ25 கொல்லாமையைக் கைக் கொண்டு ஒழுகுபவனது வாழ்நாளின் மேல், உயிர்களைப் பிடித்துண்ணும் எமன் செல்ல மாட்டான். 326 தன்னுயிர் போவதாயினும், அதைக் காப்பதற்காகத் தான் பிறிதொன்றின் இனிய உயிரைப் போக்கும் செயலைச் செய்ய வேண்டா. 327 ன்மையான ஆக்கம் பெரிதாகக் கிடைக்குமெனினும், உயிரைக் கொன்று கிடைக்கும் ஆக்கம் உயர்ந்தோர்க்குக் கீழானதே. 328 கொலைத் தொழில் செய்யும் இழிமக்கள், அதன் கீழ்மையை உணர்ந்த நல்லோரிடையே, புலைத் தொழிலினராகத் தாழ்த்தப்படுவர். 329 ணியுற்ற உடலுடன் இன்னும் சாகாத தீய வாழ்க்கையினர், முன்பு உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் கொலைத் தொழில் செய்தவர் என்று கூறுவர் அறிஞர். 330