பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 79 34. ஒன்றும் நிலைத்து ನಿಮಖTau நிலையில்லாத பொருள்களை நிலைத்தவை என்று நம்பும் புல்லறிவு உடைமை கீழானது. 3.31 பெரிய செல்வம் குவிதல், கூத்தாடும் அரங்கில் கூட்டம் வந்து கூடுவது போன்றது. அச் செல்வம் நீங்குவதும், கூத்து முடிவுற்றதும் கூட்டம் கலைதல் போன்றது. 332 செல்வம் நிலையாத் தன்மையது. எனவே அச் செல்வம் கிடைத்தால், அதைக் கொண்டு நிலையான நற்செயல்களை அப்போதே செய்க. 333 நாள் எனப்படுவது நல்ல ஒரு பொருள் போல் தோற்றிச் சிறிது சிறிதாக உயிரின் வாழ்வுக் காலத்தை அறுக்கும் ஒரு வகை வாள் என்பது உணர்பவர் இருந்தால் புரியும். 334 பேச முடியாமல் நாக்கை அடக்கி விக்குள் தோன்றுவதற்குமுன் நல்லறங்கள் முந்திச் செய்யப்பட வேண்டும். 3.35 நேற்று உயிர் வாழ்ந்தவன் ஒருவன் இன்றைக்கு இல்லை என்று சொல்லும்படியான பெருவியப்பு உடையது இந்த உலகம். 336 சிறு பொழுதும் வாழ்வது நிலையில்லாதவர்கள் எண்ணும் எண்ணங்களோ ஒரு கோடியும் அல்ல; மேலும் மிகப் பல. さ37 உடலோடு உயிருக்கு இடையே உள்ள உறவு, தங்கியிருந்த கூடு தனித்து விடும்படி அதினின்றும் பறவை பறந்துவிட்டாற் போல் நிலைக்காதது. 338 கண் மூடித் தூங்குவது போன்றது இறப்பு: தூங்கிக் கண் விழிப்பது போன்றது பிறப்பு. 339 உடம்புக்குள்ளே ஒதுங்கி ஒண்டு குடி யிருக்கும் உயிருக்கு நிலையாகத் தங்கி வாழும் இருப்பிடம் இன்னும் அமரவில்லை போலும். - S 4 O