பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 83 36. உண்மைப் பொருள் உணர்தல் உண்மைப் பொருள் அல்லாதவற்றை உண்மைப் பொருள் என்று கருதும் திரிபு மயக்கத்தால் மாட்சிமையற்ற பிறவி மீண்டும் தோன்றும். 351 திரிபுமயக்கம் நீங்கிக் குற்றமற்ற மெய்யறிவு உடையராயினார்க்கு அம்மெய்யறிவு அறியாமையிருள் நீங்கப் பேரின்பம் நல்கும். 352 இதுவா அதுவா என்னும் ஐயத்தினின்றும் நீங்கி உண்மைப் பொருள் உணர்ந்தவர்க்கு, மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிக அண்மையில் உள்ளதாம். 353 ஐம்பொறிகளால் அறியும் ஐந்து அறிவு பெற்றிருந் தாலும், ஆறாவது அறிவாகிய மெய்யறிவு - பகுத்தறிவு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை. S54 வெளித் தோற்றத்திற்கு எந்தப் பொருள் எந்த மாதிரியாய்த் தோன்றினும், அதைக்கொண்டு ஒரு முடிவுக்கு வராமல் அந்தப் பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தறிவதே மெய்யறிவு. 355 மெய்ந் நூற்களைப் படித்து இவ்வுலகில் மெய்ப்பொருள் அறிந்தவர், மற்றொரு முறை, இவ்வுலகில் வந்து பிறவாப் பெருவழி அடைவர். さ56 உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்தால், அறிந்தவர்க்கு மறுபடியும் பிறப்பு இருப்பதாக உறுதியாக நம்ப வேண்டா. 357 மீண்டும் பிறத்தல் என்னும் மடமைச் செயல் நீங்கும்படி சிறந்த வீடு என்னும் செவ்விய நிலையை ஆராய்ந்தறிவதே மெய்யறிவு. 358 சார வேண்டிய உண்மைப் பொருளை உணர்ந்து, சார்ந்துள்ள மற்ற பற்றுக்கள் கெடும்படி ஒழுகினால், சாரக் கூடிய நோய்கள் மீண்டும் வலித்துச் சாரா. 359 நோய்க்குக் காரணமான விருப்பு வெறுப்பு அறிவுக் குழப்பம் ஆகிய மூன்றின் பெயர்களும் இல்லாத படிக் கெடுத்தால் நோய்களும் கெடும். 36O