பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 85 37. ஆசையைத் தவிர்த்தல் எல்லா உயிர்கட்டும் எப்போதும் நீங்காத பிறவித் துயரை விளைக்கும் விதை அவா என்று சொல்வர். &61 ஒன்றை விரும்புவதென்றால் பிறவாப் பெரு நிலையை விரும்ப வேண்டும். மற்றபடி அந்நிலையும் எதையும் விரும்பா நிலையை விரும்பினால்தான் கிடைக்கும். 362 எதையும் விரும்பா நிலையைப் போன்ற சிறந்த பேறு இவ்வுலகில் இல்லை. இவ்வுலகில் என்றென்ன வேறு எங்கும் அதுபோன்றது ஒன்றுமில்லை! 3.63 தூய்மையாய் இருத்தல் என்றால் அவா இல்லாது இருத்தல்தான். மற்றபடி அந்நிலையும் உண்மையை விரும்பினால் உளதாகும். 364 எல்லாம் அற்றவர் என்று சொல்லத் தக்கவர்கள் ஆசையற்றவர்களே, ஆசையறாத மற்றையோர் அப்படியொன்றும் அற்றவர் ஆகார். さ65 அவா ஒருவனை வஞ்சித்துக் கெடுக்கக் கூடியது: எனவே, அந்த அவாவைக் கொள்ள அஞ்சுவதே அறமாகும்; ஒர்ந்துணர்க! 366 ஒருவன் அவாவான செயல்களை முற்றிலும் நீக்கி விட்டால் அழிவற்ற நற்செயல்கள் தான் விரும்புகிறபடி யெல்லாம் வந்தெய்தும். 367 அவா இல்லாதவர்க்குத் துன்பங்களும் இல்லையாம்; அவா இருந்தாலோ, துன்பங்கள் நீங்காது மேலும் மேலும் தொடரும். 368 துன்பங்களுக்குள் கொடிய துன்பமாகிய அவா என்பது நீங்கி விடின், இன்பங்கள் இடை விடாமல் வந்து குவியும். こ69 எப்போதும் நிரம்பாத இயல்புடைய அவாவை நீக்கிவிடின், நீக்கிய அந்நிலையிலேயே என்றும் மாறா இயல்பினதான பேரின்பம் வாய்க்கும். さ70