பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 91 39. மன்னனின் மாண்பு படைவலிமை, நற்குடி மக்கள், உணவு வளம், நல்லமைச்சர், நல்ல நண்பர், காவல் நிலைகள் ஆகிய ஆறும் உடையவனே மன்னருக்குள் ஆண்சிங்கம் அனையவன். 381 அஞ்சாத உறுதி, ஈதல், அறிவு, ஊக்கம் ஆகிய இந்த நான்கு மாண்புகளும் குறையாதிருத்தலே அரசனுக்கு அழகு. & 82 காலந் தாழ்க்காத சுறுசுறுப்பு, படிப்பு, துணிச்சல் ஆகிய இந்த மூன்று சிறப்புக்களும் நாடாளும் வேந்தனுக்கு நீங்காதிருக்க வேண்டுவனவாம். る83 அரச அறத்திலிருந்து பிழையாமல், தீய செயல்களை விலக்கி, வீரம் குறையாத மானம் உடையவனாயிருப்பவனே அரசன். 38.4 செல்வம் வருவதற்குரிய முயற்சிகளைச் செய்தலும், செய்து செல்வம் சேர்த்தலும், சேர்த்ததை அழியாமல் காத்தலும், காத்ததைப் பலர்க்கும் பங்கிட்டு வழங்கலும் செய்ய வல்லவனே சிறந்த வேந்தன். 385 மன்னன் எளிதில் காணத் தக்கவனாயும் கொடுஞ் சொல் பேசாதவனாயும் இருந்தால், உலகம் அவனை உயர்த்திப் புகழும். - - 386 இன்சொல்லுடன் வேண்டியதைக் கொடுத்துக் காக்க வல்ல மன்னனுக்கு, நான் சொல்லுகிறபடி - தான் நினைக்கிறபடி இவ்வுலகம் ஒத்து வரும். 387 நடுநிலையுடன் நீதி புரிந்து குடிகளைக் காக்கும் வேந்தன் மக்களுக்குக் கடவுள் என்று மதிக்கப்படுவான். 388 காது கசக்கும்படி கூறும் குறைச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் நற்பண்புடைய மன்னனது குடை நிழலின் கீழ் உலகம் இனிது வாழும். 38.9 கொடுத்தல், அருள், செங்கோல் ஆட்சி, குடிகளை நன்கு காத்தல் ஆகிய நான்கு பண்புகளும் உடையவனே அரசர்க்குள் ஒளி வீசும் அரசனாவான். 39 O.