பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 93 40. கல்விச் சிறப்பு கற்கக் கூடிய நூற்களைக் குற்றமறக் கற்பீராக, கற்றாலோ, அக்கல்விக்கு ஏற்ப உயர் நெறியில் நிலையாய் ஒழுகுவீராக. 391 ஒன்றை எண் என்று சொல்வர் மற்றொன்றை எழுத்து என்று சொல்வர் உண்மையில் இந்த இரண்டு கல்விப் பொருள்களும், உயிர் வாழ்பவராக நம்பப்படும் மக்களுக்குக் கண்கள் என்று சொல்லத்தக்கனவாம். 392 உண்மையில் கண்கள் உடையவராகச் சிறப்பித்துச் சொல்லப்படுதற்கு உரியவர் கற்றவரே கல்லாதவரோ, முகத்தில் - கண்கள் அல்ல. இரண்டு புண்கள் உடையவராகவே கருதப்படுவர். 393 மகிழும்படி ஒன்று கூடி உரையாடி, மீண்டும் எப்போது கூடுவோம் என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும்படி பிரிவது புலவர்கட்கு இயற்கை 394 செல்வர்முன் வறியவர்போல் கற்றவர் கடைவாயிலிலே கல்லாதவர் ஏங்கித் தாழ்ந்து நிற்றற்கு உரியர். こ95 மணலிலுள்ள கிணற்றில் தோண்டிய ஆழம் அகலத்திற்கு ஏற்ப நீர் சுரக்கும்; அதுபோல் கற்ற நூல் அளவு - கால அளவிற்கு ஏற்ப மக்கட்கு அறிவு விரியும். こ96 கற்றவர்க்கு எந்த நாடும் சொந்த நாடாகுமாதலாலும், எந்த ஊரும் சொந்த ஊராகுமாதலாலும் இவ்வளவு சிறப்பளிக்கும் கல்வியை ஒருவன் சாகும் வரை படிக்காமல் இருப்பது ஏன்? 397 ஒரு பிறவியில் தான் படித்த படிப்பு ஒருவனுக்கு ஏழு பிறவிகளிலும் காப்பளிக்கும் சிறப்புடையது. 398 கல்வி பெற்றவர், தாம் பெற்று மகிழ்வதை உலகமும் பெற்று மகிழச் செய்து அதுகண்டு மேலும் மகிழ்வர். 399 ஒருவனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியே, மற்ற உடைமைகள் செல்வம் ஆக மாட்டா. 400