பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பொருள் 43. அறிவுடைமை அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். 421 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. 423 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. 424 உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. 425 எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு. 426 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். 427 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். 428 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். 429 அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். 43O