பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 99 இல்லறத்தின் ஈடற்ற பேறு, ஊனமற்ற நன்மக்கட் பேறு என்று வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். அதற்குப் பெற்றோரின் தகுதி என்ன என்பதை அடுத்த குறளில் மிகத் தெளிவாகப் பாடியிருக்கிறார். 62. எழுபிறப்பும் தீயவை தீண்ட பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் பொருள் விளக்கம்: பழிபிறங்கா = மாசும் குற்றமும் சேராத பண்புடை = அறம் சார்ந்த செயல்களில் வாழுகிற மக்கள் = இல்வாழ்வில் ஈடுபட்டிருக்கிற அறமாந்தர்கள் பெறின் = குழந்தைகளைப் பெறுகிறபோது எழுபிறப்பும் - அவர்களின் பரம்பரையில் ஏழுதலை முறையிலும் தீயவை - (தேகத்தைத் தாக்கும்) தீயவிளைவுகள் தீண்டா = அணுகவே அணுகாது சொல் விளக்கம்: பழி = மாசு, குற்றம்; பண்பு = அறம் சார்ந்த செயல்கள் எழுபிறப்பு = ஏழு தலைமுறைகள் - முற்கால உரை: பழிக்கப்படாத நற் புதல் வரைப் பெறுவானாயின், எழுபிறப்பிலும் துன்பங்கள்அணுகா என்பதாம். தற்கால உரை: நல்ல பண்புள்ள மக்களைப் பெற்றெடுத்த குடும்பம் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் துன்பம் அடையாமல் பிறருடைய மதிப்பைப் பெறும். புதிய உரை: மாசும் குற்றமும் சேராத அறம் சார்ந்த செயலிடுபாடுகள் உடையவர்கள் குழந்தைகள் பெற்றால், அவர்கள் பரம்பரையில் தீயவிளைவுகள் உண்டாகா. விளக்கம்: ஒருவர் தீச்செயல்களில் ஈடுபடுகிறபோது அவரது குணாதிசயங்களை அவரது மரபணுக்கள் (Genes) உயிராக ஏந்திக் கொண்டு அவை தலைமுறை தலைமுறையாகத் தொடர்கின்றன.