பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா i-Ho- e e - அதன் ஆக்கமும் தாக்கமும் ஏழு பிறவிகள் கொள்கிற தலைமுறையுடன் தொடர்கின்றன என்பது அறவியலார் கூறும் உண்மைகள். அதனால் 'உடம் புக்கு மாசு நேராமல் செயல் நன்மை குறையாமல் மக்கள் வாழ வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். குடும்பத் தலைமைப் பொறுப்பேற்று குழந்தைகள் பெறும் வாய்ப்புள்ள மக்கள், உடலைத் தூய்மையாகக் காத்தல் வேண்டும். நோயாளி மக்கள் குழந்தை பெற்றுக் கொள்வது சமுதாயக் கொடுமை மட்டுமன்று. கடுமையான தண்டனைக்கும் உரியதாகும். ஏனென்றால், அந்தப் பரம்பரை பல நூறாண்டுகள் தொடர்வதுதான் காரணம். இங்கே தீண்டா என்றார். தீண்டல் என்பது நச்சுயிர்கள் தொடுவதைக் குறிக்கும். அதனால்தான் தீயவை என்பது விஷம் உடம்பில் ஏறுவது போல என்றார் வள்ளுவர். 63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் பொருள் விளக்கம்: தம் மக்கள் = தம்முடைய முயற்சியால் பெற்ற குழந்தைகளை தம்பொருள் = தம்முடைய உடல்போன்று அவர்கள் இருக்கிறார்கள். என்ப = என்றே அறிவுடையோர் கூறுகின்றார்கள் அவர்பொருள் = அதனால் அவரது பிள்ளைகளுக்குரிய உடலும், உடல் சக்தியும்; தம்தம் = தாம் செய்து கொண்டிருக்கிற வினையான் = அறம் சார்ந்த நல்வினைகளால்தான் வரும் = அமையும். சொல் விளக்கம்: தம்பொருள் = தம் உடல் போன்று அவர் பொருள் = பிள்ளைகளுக்குரிய உடல், உடல் சக்தி. முற்கால உரை: பிள்ளை தேடிய பொருள் பிதாவிற்கு வருகையால் புதல்வரைத் தம் பொருளென்று சொல்லுவர் என்பதாம். தற்கால உரை: பெற்றோருக்கு அவர்கள் பெற்றெடுக்கும் நல்ல மக்களே பெருஞ் செல்வமாகும்.