பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை IO3 65. மக்கள் மெய்திண்டல் உடற்குஇன்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு பொருள் விளக்கம்: . மக்கள்= (ஐம்பொறி உணர்வுகள் நிறையப்பெற்ற) தம் குழந்தைகள் மெய்திண்டல் = தம் பெற்றோரை வந்து கட்டித் தழுவுகிறபோது உடற்கின்பம் = பெற்றோர் பேரின்பம் பெறுகின்றார்கள் மற்றவர் = மேலும் தம் குழந்தைகள் சொல்கேட்டல் = (பேசும் சக்தி வந்திருப்பது பார்த்து) இசைக்கின்ற எழுத்துக்களின் ஒசையால் பேசுகிறபோது செவிக்கு இன்பம் - இன்னும் செவிக்கு இன்பம் மேலோங்குகிறது. சொல் விளக்கம்: - மக்கள்=தம் குழந்தைகள் சொல் கேட்டல் = பேசும் சக்தியைக் கேட்கும் போது. முற்கால உரை: மக்கள் உடலைத் தொடுதல் உடற்கின்பம். அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பம் என்பதாம். தற்கால உரை: பெற்றோர்க்குக் குழந்தைகளை அணைத்தலால் உடற்கு இன்பம் ஏற்படும். அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்பதால் செவிக்கு இன்பம் ஏற்படும். - o புதிய உரை: ് குழந்தைகள் தம் பெற்றோரைக் கட்டித்தழுவுகின்றபோது பெற்றோர்க்குப் பேரின்பம் உண்டாகிறது. அவர்கள் பேசும் மொழிகளைக் கேட்கும்போது இன்னும் இன்பம் மேலோங்குகிறது. * - - 1 - --- o - விளக்கம்: - குழந்தைகள் நடப்பதும், ஓடிவருவதும், கட்டிப்பிடிப்பதும், ஒலியெழுப்பிப் பேசுவதும், கேட்பதும் எல்லாம் ஐம்புலன்களின் செம்மையால்தான். இந்த இனிய செயல்களையெல்லாம் வள்ளுவர் இங்கே கோடிட்டுக் காட்டுகிறார். பேசாத குழந்தைக்குக் காது கேட்காது, கைகால்கள் இருந்தும் அதை இனிதாக இயக்காது. அதுபோலவே கண்ணில்லாத குழந்தை என்றால் சிறுசிறு காரியம் எதுவுமே நடக்காது. རྒ།།