பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


106 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: தந்தை தன் மகனுக்குச் செய்யக்கூடிய நல்லுதவியானது. அவனைக் கற்றறிந்தோர் அவையில் யாவர்க்கும் முன்னிலையில் தலைவனாக வீற்றிருக்கும் படிச் செய்ய அவனைக் கல்வியில் வல்லவனாக ஆக்குதலே ஆகும். புதிய உரை: தகப்பன் தன் மகனுக்கு வழிகாட்டும் வாழ்வு, பொதுமக்கள் கற்றறிந்தோர் முன்னர் ஒழுக்கத்துடனும் வலிமையுடனுன் வாழச் செய்வதாகும். விளக்கம்: தந்தையின் கடமையானது, தன் வழித்தோன்றலுக்கு, மக்கள் முன்னே இருக்கும்போது, உடலால் வலிமையும், மனத்தால் தேர்ந்த அறிவும், செயலால் ஒழுக்கசீலனாகவும் விளங்கி, முன்னிலையில் இருப்பது போல வாழச் செய்திட வேண்டும். 68. தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது பொருள் விளக்கம்: தம்மின் = இனிமையாகத் தம்மை தம் மக்கள் = தற்காத்துக் கொள்கின்ற பிள்ளைகளின் அறிவுடமை = உண்மையறிவும் புலன் தெளிவுமானது மாநிலத்து = மேன்மை மிக்க இந்த மண்ணின் மன்னுயிர்க்கு எல்லாம் = வாழ்கின்ற உயிரினங்களுக்கெல்லாம் இனிது - இனிமை பயப்பதாகும் சொல் விளக்கம்: அறிவுடைமை உண்மை, அறிவுடையனாகுதல் அறிவு = பொறி, புலன் அறிய வேண்டியவை தம் = தற்காத்தல், பங்கிட்டுக் கொள்வது முற்கால உரை: தம் மக்கள் அறிவுடமையானது தம்மைவிட உலகத்து உயிர்களுக்கு எல்லாம் இனிதாயிருக்கும் என்பதாம்.