பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

  • - -

சொல் விளக்கம்: சான்று - சாட்சி, உதாரணம், ஒழுக்கங்களிற் சிறந்தவன் தாய் = முதல், முதன்மை முற்கால உரை: தன் மகனைக் கல்வியில் வல்லவன் எனக் கேட்ட தாயானவள் பெற்ற காலத்திலும் பெருமகிழ்ச்சி அடைவாள் என்பதாம். தற்கால உரை: தம் மகன் அறிவுடையோன் என்று அறிவுடையார் சொல்லக் கேட்கும் தாய் பெரிதும் மகிழச்சி அடைவாள். புதிய உரை: ஆன்மாவாக விளங்கும் தன்மகனை அறிவு ஒழுக்கங்களின் சாட்சியாக சிறந்தவன் என அறியும் தாய் பெற்றெடுத்த வேளையினும் பெரிது மகிழ்வாள். விளக்கம்: ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய், இது இயற்கை, அவனை ஆன்றோர்களும் சகல ஒழுக்கங்களிலும் சிறந்தவன் என்று புகழும் அளவுக்கு வளர்த்து விட்டோம் உயர்த்தி விட்டோம் என்று களிப்பில் அவள் மகிழ்கிறாள். வளர்த்த பெருமைக்குள் அவளது மனம் பெரிதும் உவக்கிறது. பெற்றெடுத்தவள் இன்பம் பெறுவதில் புண்ணியம் இல்லை. அது கண்ணியமும் இல்லை. மற்ற மக்களுக்குப் பயன்படுகிற முறையில் பண்பாளனாக, மக்களுக்குள் ஒரு சான்றாக, சான்றாளனாக வளர்த்திருக்கிற பெருமைதான் பெற்றொரின் திறமை. அந்தக் கைகூடிய பலனுக்கு ஈடான இன்பம் எதுவுமில்லை. தாய் என்பவள் உலக உறவுக்கு முதலானவள். முதன்மையானவள். அவள் மகனால் பெறுகிற இன்பம்தான் இன்பத்திற்குள்ளே சிறந்த இன்பமாக இருக்கும் என்று வள்ளுவர் இங்கே காட்டுகிறார். 70. மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் பொருள் விளக்கம்: மகன் = அறக் குடும்பத்தின் வழித்தோன்றலாகிய தந்தைக்கு = தன்னை உலகுக்குத் தந்தவனாகிய தந்தைக்கு ஆற்றும் உதவி = ஏற்ற மகனாக இருக்கும் தகுதியால்