பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 109 == - இவன்தந்தை = இவனைப் பெற்றெடுத்தவன் என்கொல் நோற்றான் = எவ்வளவு வருத்தப்பட்டு இவன் இல்லற விரதம் காத்து வளர்த்தான் என்னும் சொல் - என்று புகழப்படுகிறதிலே அமைந்திருக்கிறது சொல் விளக்கம்: ஆற்றல் = தவம் செய்தல்; கொல் = வருத்தம் தவம் = இல்லறம்; உதவி = தகுதியாயிருத்தல் முற்கால உரை: பிள்ளை பிதாவுக்குச் செய்யும் உதவியானது இவன் பிதா இவனைப் பெறுதற்கு என்ன தவம் செய்தானோ என்று பிறர் சொல்லுஞ் சொல்லை உண்டாக்கல் என்பதாம். தற்கால உரை: மகன் தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறாவது, இவன் தந்தை இவனை மகனாய்ப் பெற்று வளர்க்க எப்படிப்பட்ட பெருமுயற்சி செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லேயாகும். புதிய உரை: அறக்குடும்பத் தோன்றலாகிய தன்னைத்தந்த தந்தைக்கு ஏற்ற மகனாக இருக்கும் தகுதியால், இவனைப் பெற்றெடுத்தவன் என்ன தவம் செய்தான் என்று புகழப்படுதலில் அமைந்திருக்கிறது. விளக்கம்: தந்தை காத்த இல்லற விரதத்திற்குத் தகுதியாக இவன் இருக்கிறான் என்பதே பெற்றோர்கள் காத்த புண்ணியத்திற்குப் பெருமை. எல்லா தகுதிகளும் குறையாமல் காத்து வாழ்வதே மகனுக்குப் பெருமை. அவர்களைப் பார்த்து வையம் போற்றும். அகிலத்தார் போற்றுவர். அறமும் போற்றிக் காக்கும். இல்லற அறங்களில் ஈடிலாத் தரத்தில் வாழும் தாய் தந்தையர்க்கு மகன் செய்கிற உதவியானது பெற்றோர்கள் போற்றும் அற வாழ்வில் இருந்து பிறழாமல் வாழ்வதுதான்.