பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1IO டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 8. அன்புடைமை இல்லற வாழ்வில் இனிய சுகம் அமைய வேண்டும். அந்த இனிய சுகமும் புனித நினைவில் தான் புத்தெழுச்சி பெறும். புனித நினைவுகள் பூத்துக் குலுங்கும் பொன்னான மனமும், கண்ணான உடலும், இல்லறத்தாருக்கு இன்றியமையாததாகும். உலக வாழ்க்கையை உயர்வாக வாழ, உள்ளத்தில் பற்று வேண்டும். அவா வேண்டும். ஆசை வேண்டும். ஆர்வம் வேண்டும். மனித நேயம் வேண்டும். பற்று, பாசம், நேசம், நேயம், தயை, கருணை, ஆர்வம் என்னும் அத்தனைச் சொற்களுக்கும் ஒரே சொல்லாக உருவாகி வந்ததுதான் அன்பு என்பதாகும். பிறந்த உயிர்கள் அனைத்திலும் சிறந்த உணர்வாகத் திகழ்வது அன்புதான். அந்தப் பெருமைமிகு அன்பானது, தன்னை மட்டுமே நயந்து விடாது. தன்னை அண்டியவர்களுக்கும் சுரந்து, அதோடு நிற்காமல் அனைத்து உயிர்களும் அருந்துவது போல அமையவேண்டும் என்பதே மக்கள் கொள்கையாகும். தான் கருதிய பொருள்கள் மேல் தோன்றின பற்றுள்ளம் எனும் அன்புதான், பாசப் பரணிபாடும். வாழும் தரணியை ஆளும். மனித நேயத்தைச் சூடும். அதனால்தான் தன் குடும்பம் தவிர, தன் சுற்றம் தவிர, மனித இனம் அனைத்திற்கும் உதவுகிற மாபெரும் கருணையான அன்புடைமை எனும் அதிகாரத்தை, புதல்வரைப் பெறுதல் என்பதற்கு அடுத்ததாக வைத்திருக்கிறார் வள்ளுவர். பெறுதல் என்பது புதல்வர்களை மட்டுமல்ல. புனிதமான அன்பையும் தான் என்று குறித்துக் காட்டுகிறார் வள்ளுவர். அன்புடைமை என்னும் சொல்லிலேயே அன்பு உடை, மெய் ஆகிய சொற்கள் கலந்துள்ளன. உடலானது அன்பை உடுத்தி இருக்கிறது என்னும் உண்மையைத்தான் மெய் உடை அன்பு என்று கூறி, அன்புடைமை என்னும் தலைப்பை வைத்திருக்கிறார்.