பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 113 73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. பொருள் விளக்கம்: என்போடு - உடம்போடு; இயைந்த ஒன்றிப் போய் தொடர்பு = ஒழுங்கான உறவு கொண்டு ஆருயிர்க்கு பொருந்தியிருக்கிற அரிய உயிர்க்கு வழக்கென்ப = வழக்கப்படி (பிறரிடத்து) அன்போடு = அன்பு பாராட்டுகிறபோது இயைந்ததென்ப = புகழ் கிடைக்கிறது. சொல் விளக்கம்: இயை = புகழ், ஒழுங்கு, இணங்குதல் தொடர்பு = தொடர்ச்சி , உறவு; வழக்கு = வழக்கம், நியாயம் முற்கால உரை: மக்களுயிருக்கு உடலோடு உண்டாகிய சம்பந்தத்தை அன்போடு பொருந்தவந்த பயன் என்பர் என்பதாம். தற்கால உரை: கட்புலனுக்குத் தெரியாத உயிருக்கும் கட்புலனுக்குத் தெரிந்த உடம்புக்கும் எப்படிப்பட்ட தொடர்போ அப்படிப்பட்ட தொடர்பு வாழ்க்கையில் அன்புக்கும் செயலுக்கும் இடையே இருக்க வேண்டும். புதிய உரை: உடம்புடன் ஒன்றிப்போய் ஒழுங்கான உறவு கொண்டிருக்கும் உயிர்கட்குப் பிறரிடத்து அன்புகாட்டுகிற போது புகழ்கிடைக்கிறது. விளக்கம்: \ உடம்போடு ஒன்றி உறவு கொண்டிருக்கிற அரிய உயிர்க்கும். அன்பு பாராட்டுகிறபோது புகழாகிய பெருமை கிடைக்கிறது. முதல் குறளில் உள்ளத்தால் அன்பு கொள்ளச் சொன்னார். 2வது குறளில் உடம்பால் அன்பு பாராட்டச் சொன்னார். 3 வது குறளில் உயிரால் அன்பு பாராட்டும்போது புகழ் கிடைக்கிறது; பெருமை சிறக்கிறது; வாழ்வும் செழிக்கிறது என்கிறார். இல்வாழ்வானுக்கு இயல்புடைய மூவர் என்று உடல் மனம் உயிர் என்று கூரிய வள்ளுவர் இந்த மூன்றாலும் அன்பு செய்ய வேண்டும் என்று கூறிக் காட்டுகிறார்.