பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I 15 நாடா என்பதற்கு அளவிறந்த என்றும் மிக்க என்றும் பொருள் கூறியதை, நான் இணைக்கும் அணி நாடா என்று பொருள் கொண்டிருக்கிறேன். 75. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு பொருள் விளக்கம்: அன்புற்று - அன்பு செய்கிற ஆர்வலருக்கு அமர்ந்த = அமைதி கொள்ளுதல் என்பது வழக்கென்ப = வழக்கமான வழிப்பயணமாகிறது வையகத்து = இந்நிலவுலகில் இன்புற்றார் - இன்பமடைந்து வாழ்கிறவர்களைவிட எய்தும் சிறப்பு = பெறுகிற இன்பம் மேலும் மேன்மை உடையதாக விளங்குகிறது சொல் விளக்கம்: அமர்ந்த = பொருந்திய, அமைதியாதல் வழக்கு = வழக்கம், வழிப்பயன், செயல்பயன் முற்கால உரை: விண்ணுலகில் அடையும் பேரின்பத்தை, மண்ணுலகில் இல்வாழ்க்கையில் பொருந்தியவன் பின் பயனென்பர் என்பதாம். தற்கால உரை: தம் குடும்பத்தாரிடத்திலும், பிறரிடத்திலும், அன்பு உடையவர் வாழ்க்கையில் இன்பத்தையும் பெருஞ் சிறப்பையும் பெறுவார்கள். புதிய உரை: அன்பு செய்பவர்க்கு அமைதி கொள்ளுதல் வழக்கமாகிறது. இவ்வுலகில் இன்பம் அடைவதைவிட மேலான இன்பத்தை மேலும் கொடுக்கிறது. விளக்கம்: அன்பு செய்கிற ஆர்வலர்க்கு அமைதியான மனமே வழிப் பயணம் ஆகி விடுவதால், அவர் மற்றவர்கள் பெறுகிற இன்பத்தைவிட, மேன்மையான இன்பத்தையும் உயர்வையும் பெறுகின்றார்.