பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை - 9 உரை எழுதியதன் நோக்கம்! தமிழில் தெளிந்த தகைமைசால் அறிஞர்கள், திருக்குறள் தோன்றிய காலத்திலிருந்தே, தெளிவுரை என்றும் தேர்ந்த உரை என்றும் எழுதிக் கொண்டே வருகின்றார்கள். எண்ணுந்தோறும் புதிய எண்ணங்கள், எழுதுந்தோறும் புதிய உரைகள் என்று பிறந்து கொண்டே இருக்கின்றன. திருக்குறளை வாழ்வியல் நூல் என்பார்கள். உலகியல் நூல் என்பார்கள். உயிரியல் நூல், பொருளியல் நூல் என்பார்கள். மத இயல் நூல் என்றும், தாங்கள் சேர்ந்திருக்கும் இடத்திற்கேற்ப, வாழ்கின்ற வாழ்க்கை முறைக்கேற்ப, சுற்றுச் சூழலுக்கேற்ப, தங்கள் பக்கம் திருக்குறளைச் சேர்த்துக் கொண்டார்கள்; இழுத்துக் கொண்டார்கள் உரையாசிரியர்கள். உலக வாழ்க்கைக்கு உடல்தான் ஆதாரம் - அடிப்படை. அறம், பொருள், இன்பம் என்பதெல்லாம் உடல் நலம், மனவளம், ஆன்ம பலம் போன்றவற்றின் அடிப்படையில் தான் சிறப்புறத் தொடர்கிறது, படர்கிறது என்பது, எல்லோருமே ஏற்றுக் கொண்டிருக்கிற உண்மையாகும். ஒழுக்கம் தவறிச் செய்யும் செயல்களுக்கு ஏற்ப தண்டனை உண்டு என்பதனை, வலியுறுத்தும் வகையில் தான், வள்ளுவர்தமது குறள் பாக்களை வடிவமைத்துத் தந்திருப்பதை, நாம் குறள் முழுவதும் காணலாம். நல்ல உடலில் நல்ல மனம் இருக்கும். நல்ல உடல் தான் நல்ல வாழ்க்கையை உருவாக்கும். நல்லொழுக்கத்தை நிலை நாட்டும். வழக்கு ஏதும் வந்து விடாம்ல் பாதுகாக்கும். எனவேதான், வள்ளுவரின் மறையான திருக்குறளில் மறைந்து நிறைந்து கிடக்கும் உடலியல் சார்ந்த வாழ்வு நெறியின் நுண்மை நிறைந்த பல கருத்துக்களை வெளிப்படுத்தும் வேட்கையுடன் நானும் ஒரு புதிய உரையை எழுத முன் வந்திருக்கிறேன். பிற உரையாசிரியர்கள் உரையெல்லாம் பிழைகளா? பொருத்தமில்லாதனவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. நானும் இங்கு அதுபற்றி வாதம் செய்ய வரவில்லை; முயலவில்லை. அப்படி நினைப்பதே அவமானம்ாகு ம்.