பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை I [ 7 சமயத்தில் அன்பானது உடல் அழிக்கும் தீய குணங்களையும் குறைக்க வைத்து, தகுதியும் தரமும் வாய்ந்த தேகத்தை வளர்த்து, வாழ்க்கையின் துணையாக, உதவியாக, புகலிடமாகவும் இருந்து காத்து உதவுகிறது. குறை போக்கவும் நிறை சேர்க்கவும் அன்பு உதவுகிறது என்பதாக 6 வது குறளில் வள்ளுவர் கூறுகிறார். 77. என்பில் அதனை வெயில்போலக் காயுமே அன்பில் அதனை அறம். பொருள் விளக்கம்: என்பு = நல்ல வலிமையுள்ள உடம்பு இல் அதனை = இல்லாதபோது வெயில்போல = சூரிய ஒளியும் காயுமே = மிகுதியாக வருத்தும் அறம் = அறமான ஒழுக்க நிலை இருந்தாலும் அன்பு இல்லதனை = அன்பு இல்லாத ஒருவரை வேதனைப்படுத்தும் சொல் விளக்கம்: என்பு = எலும்பு, உடல். எலும்பு என்றால் அங்கம். அங்கம் என்றால் மனம், சீவன் என்னும் பொருள்கள் பல. என்பு இல் என்றதால், நல்ல உடல், வலிமையான மனம், செழிப்பான சீவன் இல்லாத போது - அதாவது பஞ்ச பூதம் உலவுகிற பஞ்சேந்திரிய உடலானது வெயிலாலும் வருந்தி வாடும்; கேடுறும். அதுப்ோலவே, அன்பு என்பது பண்பான வாழ்வு முறை. ஒருவருக்கு அன்பு இல்லாதபோது அவரது ஒழுக்கமும், அறிவும் நற் செயல்களும் உதவாமல் வருத்தி வாழ்வையே வீணடித்து விடும். முற்கால உரை: என்பில்லாத புழுக்களைச் சூரியன் சுடுதல்போல, அன்பில்லா உயிர்களை அறக்கடவுள் சுடும். தற்கால உரை: எலும்பு இல்லாத புழுவை வெயில் எப்படி வாட்டி வருத்துமோ அப்படியே அன்பு இல்லாதவர்களை அறநெறியானது வாட்டி வருத்தும்.