பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 121 தற்கால உரை: அன்புடையவர்களே உயிருடையவர்களாகக் கருதப்படுவர். அன்பு இல்லாதவர்கள் இறந்த பிணம் போன்றே எண்ணப்படுவார்கள். புதிய உரை: அன்பின் இடம் உயிாக்காற்றாகிய சீவனில் உள்ளது. மெய்யன்பு பிராணனில் பிறப்பெடுக்காத அன்பு தோலால் போர்த்தப் பெற்ற சவமாகவே இயங்கும். விளக்கம்: ஆகவே, அன்பு கொள்ள வலிமையான உடல் வேண்டும். வளமான மனம் வேண்டும். வயப்படுத்தி வழிப்படுத்துகிற ஆத்மா வேண்டும். வாயால் சொல்லுகிற அன்பு, விழியால் காட்டுகிற அன்பு. உறுப்புகளால் வெளிப்படுத்துகிற அன்பு எல்லாவற்றையும் விட, உயிராய் இருப்பதும் உயிராய் மதிப்பதும்தான் உயர்நிலையான மனித குணம். - மனத்தில் மட்டும் அன்பு இருந்தால் அது அன்புடைமை அன்று. உடல் முழுதும் வியாபித்திருக்கிற உயிர்போல, உயிர்நிலையாகக் கொள்வதே தேவகுணம் என்று தெரிவிக்கிறார் வள்ளுவர்.