பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 9. விருந்தோம்பல் உடலால் காட்டுகின்ற அன்பு கலைந்து விடும். உள்ளத்தால் மீட்டுகின்ற அன்பு சலித்து விடும். உயிரோட்ட்மாக இருக்கின்ற அன்பே நிலைத்து நிற்கும் என்று அன்புடைமை அதிகாரத்தில் வள்ளுவர் விளக்கினார். அன்பு யாரிடம் எப்படிக் காட்ட வேண்டும்? குடும்பத்தாரிடம் காட்டுகின்ற அன்பு - பாசம். சுற்றத்தாரிடம் காட்டுகின்ற அன்பு-பரிவு. புதியவர்களிடம் காட்டுகின்ற அன்பு-மனித நேயமாகும். இத்தகைய இனிய மனித நேயமானது இல் வாழ்வோர்க்கு என்றும் தேவை என்பத்ால்தான், அன்புடைமைக்கு அடுத்ததாக விருந்தோம்பலை வள்ளுவர் வைத்திருக்கிறார். விருந்து என்பதற்குச் சுற்றும் விருந்தினர் என்பதுபோல, புதுமை என்று ஒரு பொருள் உண்டு. ஒம்பல் என்றால் பாதுகாத்தல், வளர்த்தல் என்றும் பொருள்கள் உண்டு. வருகிற சுற்றத்தாரிடம் புதியவர்களிடம் காட்டுகின்ற மனித நேயத்தில் புதிய சிந்தனைகள் போலப் புத்துணர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் விருந்தோம்பல் என்று பெயர் சூட்டியிருக்கிறார். புதியவராகிய விருந்தினரைப் பார்த்தவுடன் விருந்தேற்கிற இல்லறத்தான் இதயத்திலே சிந்தனைகள் புதியனவாகவும், செயல்கள் இனியனவாகவும், சுரந்து சுகந்தர வேண்டும் என்பது வள்ளுவரின் வேட்கை. வயிற்றுக்குச் சோறிடுவது மட்டும் விருந்தன்று. மனத்துக்கும் சோறிடுவது போல இதமான பதமான புதுமைகளை வழங்குவது இல்வாழ்வார்க்கு நல்வாழ்வு தரும் என்று விருந்தோம்பலில் விருந்து படைத்திருக்கிறார் வள்ளுவர்.