பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 123 - o- = 81. இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு பொருள் விளக்கம்: விருந்தோம்பி = புதியவரைக் காத்து, புதுமையை வளர்த்து வேள் ஆண்மை - சிந்திக்கும் அழகாலும், ஆற்றலாலும், மன முயற்சியாலும்; செய்தல் = அரிய செயலாற்றி பொருட்டு = மேம்பட்டவராகி இருந்து ஓம்பி = (சாட்சியாக) மக்களுக்கு சான்றாகத் திகழ்வது இல்வாழ்வதெல்லாம் = வீட்டிலே வாழ்கின்ற அறனுக்குரிய அற்புத குணங்களாகும். சொல் விளக்கம்: இருந்து = சாட்சி; ஒம்பு = பாதுகாத்தல், வளர்த்தல் விருந்து = புதுமை, விருந்தினர், சுற்றத்தார் வேள் = மன்மதன் (சிந்திக்கும் அழகாளன்) ஆண்மை = மனமுயற்சி, வெற்றி, திடன் செய்தல் = அரிய செயல்; பொருட்டு = மேம்பட்டது. முற்கால உரை: இல் வாழ்க்கையில் வாழ்வதெல்லாம் விருந்தினரைக் காப்பாற்றும் பொருட்டு என்பதாம். தற்கால உரை: இல்லின் கண் வாழ்வது விருந்தினரைப் பேணுதற்கே. புதிய உரை: சிந்திக்கும் அழகாலும் ஆற்றலாலும், புதியவர்களைக் காக்கும் பொறுப்பாலும் சிறப்பாலும், புதுமையுடன் அரிய செயலாற்றி மனமுயற்சியால் வெற்றியாளராக உயர்ந்து மற்றவர்களுக்கும் சான்றாக இல் வாழ்வான் வாழ வேண்டும். விளக்கம்: முதற்பாடலில் விருந்தோம்புகிறவர் அழகும் அறிவாற்றலும் மிக்கவராய் உயர்ந்து, மற்றவர்களிடம் இவர் ஒரு சான்றாளராக விளங்குவார் என்பதைக் குறித்துக் காட்டுகிறார்.