பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று பொருள் விளக்கம்: விருந்து - தன்னை நாடி வந்திருக்கும் புதியவர் புறத்ததா = புறத்தே இருக்கும்போது வேண்டல் = விரும்பிய; சாவா = அழியாத மருந்தெனினும் - அமுதமாயினும் (அமுதம் - உவகை) வேண்டல் - தானே சுவைத்துக் கொண்டிருப்பது பாற்றன்று = மாறுபாடான முறையாகும் சொல் விளக்கம்: மருந்து அமுதம், உயிர்காக்கும் பொருள். அ + முதம் = அமுதம், அ = அகச்சுட்டு, புறச்சுட்டு: முதம் - உவகை, மகிழ்ச்சி, வேண்டல் = விரும்புதல் உண்டல் = சுவைத்தல்; பாற்று = நீக்கல்; அன்று = மாறுபாடு முற்கால உரை: வந்த விருந்தினரைப் புறம் வைத்துத் தேவாமிர்தமாயினும் உண்ணப்படாது என்பதாம். தற்கால உரை: விருந்தினரை வீட்டின் வெளியே வைத்து விட்டுத் தாம் H வீட்டினுள் உண்டல் விரும்பத்தக்கதன்று. புதிய உரை: தம்மிடம் வந்த புதிய விருந்தினருடன் தாம் பெற்றுச் சுவைக்கின்ற அழியாத மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது (வெறும் உணவிடுவது) முறை அற்றதாகும். விளக்கம்: உணவு உடலுக்கு மகிழ்ச்சி. மனதுக்கும் உயிருக்கும் முழுமையான விருந்தோம்பல் என்பது, புதிய விருந்தினரைப் பெரிதும் போற்றிக் காப்பதும், கெளரவப்படுத்துவதுமாகும். உணவை வழங்குவது மட்டும் விருந்தல்ல. தமது மகிழ்ச்சியான உணவையும் உணர்வையும் பகிர்ந்து கொள்வதே முறையாகும். இரண்டாவது பாடலில் அவரைச் சிறந்த சான்றாளாாக்கும் குணப்பண்பைக் குறித்துக்காட்டுகிறார்.