பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 125 - 83. வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. பொருள் விளக்கம்: வரு - த்ாம் எதிர்பார்த்து அல்லது பார்க்காத நேரத்திலும் வருகிற விருந்து = புதியவருக்கு; வைகலும் = தங்குமிடம் தந்து ஒம்புவான் = பாதுகாப்பளித்துக் காப்பாற்றுபவன் வாழ்க்கை = வாழ்க்கையானது; இன்று = இந்த நாளிலிருந்தே பாழ்படுதல் = அழிவுறாமல்; பரு = சுவர்க்க சுகத்தைத் தந்து = தந்துவிடும். சொல் விளக்கம்: வைகல் = தங்குதல்; வரு = எதிர்பார்க்கிற பருவந்து = வருந்துதல், இங்கே நான் அந்தச் சொல்லைப் பிரித்திருக்கிறேன்; பரு = சுவர்க்கம் (பருமை = பெருமை) பாழ்படுதல் = அழிவுறுதல்; இன்று இந்தநாள் முற்கால உரை: தினந்தோறும் விருந்தோம்புபவனுக்கு, அதனாலே பொருள் குறையாமல் மேலும் மேலும் வளரும் என்பதாம். தற்கால உரை: விருந்தினரைப் பேணுவான் வறுமையுறுதல் இல்லை. புதிய உரை: உணவளிப்பதுடன், உணர்வினைப் பகிர்ந்து கொள்வதுடன், விருந்தினர்க்குத் தங்குமிடமும் தந்து பாதுகாக்கின்றவரது வாழ்க்கையில், அழிவுகள் எதுவும் நேராமல் ஆனந்தமயமான வாழ்வே நிறைந்து வரும். விளக்கம்: பருவந்து என்பதற்கு வறுமை என்றும், வருந்துதல் என்றும், பொருள் காண்பார்கள். நான் பரு + வந்து என்று பிரித்தேன். பரு என்றால் கடல் (மிகுதி) என்றும் வளர்தல் என்றும், சுவர்க்கம் என்றும் பொருள்கள் உண்டு. சொர்க்கம் என்பது உடலாலும் மனத்தாலும் உயிராலும் பெறுகிற சுகங்களின் தொகுப்பாகும். ஆகவே, வாழ்வில் அழியாது வளருகின்ற சுகத்திற்கு அளவே இல்லை என்கிற குறிப்பைத் தருகிறார் வள்ளுவர். மூன்றாவது குறளில் விருந்தோம்புபவன் வாழ்க்கை மகிழ்ச்சியில் திளைக்கும் என்று காட்டுகிறார்.