பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை I:27 85. வித்துமிடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். பொருள் விளக்கம்: விருந்தோம்பி = வந்திருக்கும் விருந்தினரை மிச்சில் - அவர் வறுமையை (அஞ்ஞானத்தை) மிசைவான் = உணர்ந்து புரிந்து கொண்டு உதவுபவனுடைய புலம் = ஆற்றல் மிக்க ஐம்புலன்களிலும் வித்து = அறிவும். மிடல் = வலிமையும் வேண்டும்கொல் = தடையின்றி விரும்பி வளரும். சொல் விளக்கம்: வித்து = அறிவு; மிடல் = வலிமை மிச்சில் = வறுமை, தரித்திரம்; அஞ்ஞானம் மிசை-உணர்தல் புலம் - ஐம்புலன்; கொல் = குறுக்குத்தாழ் (தடைகள்) முற்கால உரை: விருந்தினரைக் காப்பவள் விளைநிலம் தானே விளையும். தற்கால உரை: விருந்தினரை உண்பித்து மிஞ்சிய உணவைத்தான் உண்பவனது நிலத்தில் விதை விதைக்க வேலியே வேண்டுவதில்லை. புதிய உரை: வந்திருக்கும் விருந்தினருக்கு உணவூட்டி குறிப்பால் அவர் வறுமையை அறிந்து உதவுபவன் ஐம் புலன்களிலும், ஆற்றல் பெறுகிற அறிவும், வலிமையும் தடையின்றிப் பெருகும். விளக்கம்: எல்லா உரையாசிரியர்களுமே வித்து என்பதற்கு விதை என்றும் மிடல் என்பதற்குப் பதிலாக இடல் என்றும், மிகச் சில என்பதற்கு, மிஞ்சிய என்றும் மிசைதல் என்பதற்கு உண்ணுதல் என்றும் புலம் என்பதற்கு, நிலம் என்றும் பொருள் கொண்டிருக்கின்றார்கள். எனது உரை இங்கே மாறுபட்டிருக்கிறது. முகத்தால் மலர்ந்தும், அகத்தால் தெளிந்தும் விருந்துட்டுவதுடன் அவரது தேவைக்கும் உதவ வேண்டும். அதுவே, விருந்தோம்பலின் வேள்விச்சிறப்பாகும். அஞ்ஞானத்தை நீக்குவதும் வறுமையைப் போக்குவதும், வயிறார உண்பிப்பதும் விருந்தளிப்புக்கு மகுடமாய் அமையும். அது அறனின் புலமெய்க்குப் புத்துணர்ச்சி அளிக்கும் என்று இந்தப் பாடலில் விளக்குகிறார்.