பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு பொருள் விளக்கம்: செல் விருந்து - மேகம்போல் வந்து தங்கிச் செல்லுகின்ற விருந்தினரை: ஓம்பி = காத்து வருவிருந்து = மேலும் விருந்தினர்களின் வரவிற்காக பார்த்திருப்பான் = விசாரித்து எதிர்பார்த்து மதித்து உதவுபவன் வானம் = மழைபோல் குளிர்ச்சி பொருந்திய தவர்க்கும் - (ஐம்புலன்களை வென்ற) பற்றற் றோருக்கும். நல்விருந்து = நன்மைகளைச் செய்து விருந்தாகத் திகழ்வான். சொல் விளக்கம்: செல் - மேகம் செல்கின்ற; வானம் - குளிர்ச்சி, மழை, ஆகாயம் பார்த்தல் = வணங்குதல், மதித்தல், விரும்புதல், விசாரித்தல் நல்விருந்து = நன்மைகள் அதிகமாகச் செய்யும் புதுமையாளனாக விருந்து - புதுமை, சுற்றம், விருந்தினர் தவர் = முனிவர், பற்றற்றார், அறிஞர்கள் முற்கால உரை: வந்த விருந்தாளிகளைக்காப்பாற்றி, வரும் விருந்தாளிகளுக்காக எதிர்பார்ப்பவன் தேவர்களுக்கு விருந்தாளியாகிறான். தற்கால உரை: எப்பொழுதும் விருந்தோம்புபவனுடைய புகழ் அவன் மறைந்த பிறகு கூட நிலைத்து நிற்கும். புதிய உரை: மேகம்போல் வந்து உண்டு மகிழ்ந்து செல்கின்ற விருந்தினருக்குப் பிறகு, மீண்டும் விருந்தினரை எதிர்பார்த்து அவர்களை மதித்து வணங்கி குறை விசாரித்துக் காப்பவன். ஐம்புலன் வென்றாருக்குக் கிடைத்தற்கரிய விருந்தினனாக ஆகிறான். விளக்கம்: செல் என்றால் செல்கின்ற என்பதை விட, மேகம் என்ற பொருள் சிறப்புக்குரியது. கடல் தேடி வந்து நீர் முகந்து செல்கிற மேகம்போல், விருந்தளிப்போனிடம் அறிந்து வந்து அருந்தி மகிழ்பவரைத்தான் வள்ளுவர் செல் விருந்து என்றார். வானம் என்றால் மழை என்றும், மழை என்றால் குளிர்ச்சி என்றும், பொருள் இருப்பதால், தவராகிய அறிஞர்கள், பற்றற்றார்கள், ஐம்புலன் வென்றவர்கள் அனைவருக்கும் நன்மை செய்கின்றவனாகவும் அறன் விளங்குகிறான் என்று விருந்தோம்புவோன் சிறப்பை மேலும் விரிவாக்கிக் கூறுகிறார்.