பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 129 87. இ த்து என் ன்றுஇல் பிருந்தில் துணைத்துணை வேள்விப் பயன் பொருள் விளக்கம்: துணை = உதவியை; இனைத்து = எவ்வளவு என்று ஒப்புவமை காட்டுவது என்பதைக் குறிப்பிட முடியாது. விருந்தின் = உதவிக்காக வந்திருப்பவரின் துணை = உதவிக்கு; துணை = உதவிபுரிபவரது வேள்வி - ஈகைத்தன்மையான கொடைப் பண்பு, மற்றும் பயன் = செல்வத்தைப் பொறுத்தே அமைகிறது. சொல் விளக்கம்: இணை = எல்லை, ஒப்பு: துணை = உதவி, உதவிபுரிவோன் வேள்வி = ஈகை பயன் = செல்வம் முற்கால உரை: விருந்தினரைக் காக்கும் உதவி இவ்வளவு என்பது ஒன்றுமில்லை. விருந்தினர்க்குத் தகுதி அளவேயாம். தற்கால உரை: விருந்தினர் எந்த அளவுக்கு விருந்தை உவந்து ஏற்கிறார்களோ அந்த அளவுதான் விருந்தினரின் தகுதி அமையும். புதிய உரை: உதவி புரிபவரது செல்வத்தின் அளவைப் பொறுத்தே ஈகையின் அளவும் எவ்வளவு என்று அமையும். இவ்வளவு தான் உதவ முடியும் என்னும் அளவு இல்லை. அது விருந்தேற் பவர் மனநிலை, பண நிலை, ஏற்பவரின் தேவை நிலை பற்றியே முழுவதுமாக அமையும். விளக்கம்: 5 வது குறளில் விருந்தினரின் வறுமை பற்றியும், அறிந்து கொண்டு விருந்துட்டி உதவ வேண்டும் என்றார். இதை உணர வேண்டும் என்றார். 6 வது பாடலில் மதித்து விசாரித்து உதவ வேண்டும் என்றார். 7வது குறளில் வந்தவர் தேவைக்கும், தருபவர் ஈகை மனத்துக்கும், செல்வ வளத்திற்கும் உள்ள அளவைக் கூற முடியாது அமைந்திருக்கும். ஆகவே, உதவி புரிபவர் உள்ளமும் செல்வமும்தான் நிர்ணயிக்கும் என்ற எதார்த்த நிலைக்குரிய சூழ்நிலையை உணர்த்துகிறார். -