பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை [.3/ 89. உடமைஉள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை மடவார்கண் உண்டு. பொருள் விளக்கம்: ஒம்பா = பாதுகாத்து அன்பு வளர்க்க: உடமை உரிய செல்வமும் உள் - உள்ள மன எழுச்சியும் இன்மை = இல்லாதபோதும் (வறுமையுற்ற போதும்) விருந்தோம்பல் - விருந்தினரை ஒம்புகின்ற மடமை = (மடம் ஐ) உயர்ந்த கோயிலாக கண் = பெருமையான அகநோக்கும் புற நோக்கும் கொண்ட மடவார் உண்டு - இல்லத்துப் பெண்களும் உண்டு. சொல் விளக்கம்: உடமை = உரிமை செல்வம்; உள் = மன எழுச்சி இன்மை = இல்லாமை, மடம் + ஐ = மடமை = கோயில், வாசம் ஐ = உயர்ந்த, கண் = பெருமை, அகநோக்கு, புறநோக்கு மடவார் - பெண் முற்கால உரை: செல்வத்துள் வறுமையாவது விருந்தினரை உபசரியாமை. அது அறிவில்லாரிடத்துண்டு. தற்கால உரை: விருந்தினரை வரவேற்றுப் போற்றாதவன் மிகுந்த செல்வம் உடையவனாக இருந்தாலும், அவன் வறியவன் என்றே கருதப்படுவான். புதிய உரை: விரும்தோம்ப உதவும் செல்வமும் இன்றி வறுமைப்பட்டு, அதனால் மன எழுச்சி குறைந்து போனாலும், விருந்தோம்பும் கோயிலாக அவர்களது இல் லத்து பெண்கள் இருந்து உபசரிப்பார்கள். விளக்கம்: இல்லறத்தில் ஆண் பெண் இருவரும் உண்டு. விருந்தோம் பலில் இருவருக்கும் சம பங்குண்டு. விருந்தோம்பல் செய்ய இயலாத வண்ணம் வறுமை ஏற்பட்டாலும் கூட, அறனுக்கு உற்றுழி உதவும் அவரது பெண்கள் உயர்ந்த கோயிலாக விளங்குவர். சிறந்த ஒம்புதலையும் செய்வர்.