பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.34 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் பொருள் விளக்கம்: கண்டார் வாய் = (தம்மிடம்) சம்பந்தமில்லாதவரிடம் ஆல் = இரக்கம்: ஈரம் = அறிவான அன்பு; அளைஇ = கலந்து படிறிலவாம் - களவு, பொய், கொடுமை இல்லாத செம்பொருள் = செம்மை நிறைந்த ஒழுக்கம் சார்ந்த (உண்மைநிறைந்த) சொல் இன்சொல் = சொல்லே, இனிய சொல்லாகும். சொல் விளக்கம்: ஆல் = இரக்கம், ஈரம், அறிவு, அன்பு, அழகு, பண்பு கண்டார் = சம்பந்தமில்லாதவர். வாய் = இடம் முற்கால உரை: அறத்தின் வழியை அறிந்தவர் வாய்ச் சொற்களே, இனிய சொற்களாகும். தற்கால உரை: பிறரிடம் வஞ்சனை ஏதும் கொள்ளாமல், உள்ளன்போடு உண்மையாகப் பேசுவதே இன்சொல்லாகும். புதிய உரை: சம்பந்தமே இல்லாத புதியவர்களிடமும் இரக்கத்துடன். அறிவான அன்புடன், பொய் கலவாத உண்மையான, ஒழுக்கம் நிறைந்து பேசும் சொல்லே இனிய சொல்லாகும். விளக்கம்: குடும்பத்தாரிடமும், கூடப்பழகும் சுற்றத்தாரிடமும் கூறுகிற சொற்கள், இனிய சொற்களுக்கான இலக்கணம் இல்லை. முன்பின் தெரியாதவரிடத்து, தனக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத வரிடத்துப் பேசுகிற தயவான சொல்லும், அறிவுசான்ற அன்பான பண்பான சொல்லும், மெய்யான மனத்துடன் பேசும் மாறுபாடற்ற சொல்லும் இனிய சொல்லாக இலக்கியம் படைக்கிறது என்று முதல் குறளில் இனியசொல் பற்றிய இயல்பை விளக்கியிருக்கிறார்.