பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


136 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 93. முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொல் இனதே அறம். பொருள் விளக்கம்: முகத்தான் அமர்ந்து - (காணும் புதியவர்களை) விரும்பிக் காணுகிற முகப்பொலிவுடன் இனிது நோக்கி = அன்பாக மனம் செலுத்தி இனதே = (நீங்கள்) எங்கள் உறவினர் என்று இன்சொல் = இனிய சொற்களைச் சொல்கின்ற அகத்தான் ஆம் = இல்வாழ்வார்க்கு அறம் = சம்மந்தப் படுத்துகின்ற சொல்லே ஞானமாகும். (ஒழுக்கம் சார்ந்த நல்வினையுமாகும்) சொல் விளக்கம்: அமர்ந்து = விரும்பி; நோக்கி - மனம் செலுத்தி இனதே = உறவின்முறை; ஆம் = சம்மதம் தெரிவிக்கும் சொல்; அகத்தான் = இல்வாழ்வான் அறம் = ஞானம், ஒழுக்கம், நல்வினை முற்கால உரை: தருமமானது இன்சொல்லின் இடத்தே என்பதாம் தற்கால உரை: ஒருவரை முகம் கொடுத்து இனிமையாகப் பார்த்து உள்ளத்தோடு ஒன்றிப் பொருந்திய இனிய சொற்களைக் கூறும் தன்மையே அறமாகும். புதிய உரை: == o ζΥ . 暉 -: - o- . - - _* - = h * ~ علي வந்தாரை, விரும்பிக் காணும் முகத்துடன், மனமகிழ்ச்சியை லி .ெ .ெ .ெ . . . . 4° - ". . . .:- ..". -- ~ * - o விழியால் வெளிப்படுத்தி, நீங்கள் எங்கள் உறவினர் எனறு சம்மந்தப்படுத்துகிற இனிய சொற்களைப் பேசுவது இல்வாழ் வாரின் ஞானமிகு ஒழுக்கப் பண்பாகும். - விளக்கம்: முகபாவத்தாலும், விழிநோக்காலும் நீங்கள் வேறல்லர் உங்களுக்கு நாங்கள் உறவினர்தாம் என்பதை வெளிப்படுத் துவதுடன், சம்மந்தப்படுத்தும் பேச்சானது, ஞானத்தின் வெளிப்பாடே. அறமான ஞானம் இனிய சொல்லுக்கு ஆதாரம் என்னும் குறிப்பை 3 வது குறளில் கூறுகின்றார்.