பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I37 94. துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறுஉம் இன்சொல் அவர்க்கு பொருள் விளக்கம்: யார் மாட்டும் - எவராக இருந்தபோதும் இன்புறுஉம் = உள்ளத்திற்கும் ஐம்பொறிகளுக்கும் இனிமை பயப்பது போன்ற இன்சொல் = இனிய சொல் சொல்கிறபோது துவ்வாமை = கேட்பாரது வெறுமை உணர்வும், வறுமை நிலையும் துன்புறும் = வருத்தப்பட்டு வெளியேறும் அவர்க்கு = அந்த இனிய சூழ்நிலை அமையப்பெற்ற வர்க்கு இல்லாகும் = வீடு பெற்றது போன்ற அனுபவம் ஏற்படும். சொல் விளக்கம்: . துவ்வாமை = அனுபவம், வறுமை, தரித்திரம்; துன்பு - துன்பம் உறு = மிகுதி; இல் = வீடு; மோட்சம்; சுவர்க்கம் இன்பம் முற்கால உரை: இன்சொல் உடையார் வறுமை உறுதல் இல்லை. துன்பம் அடைவதில்லை. தற்கால உரை: எவரிடத்தும் இன்பம் பயக்கும் இனிய சொற்களைச் சொல்லுபவருக்குத், துன்பத்தைத் தரும் வறுமை இல்லாமற் போகும். - புதிய உரை: எவராக இருந்தபோதும் அவரை மதித்து இனிய சொற்களைச் சொல்லுகிறபோது, அவர்க்கு இன்பமே நிறையும். அதனால் அவரை வருத்துகின்ற வறுமையும் வெறுமையும் துன்பம் அடையும். சொர்க்கத்தில் இருப்பது போன்ற மகிழ்வும் உண்டாகும். விளக்கம்: இனிய சொற்களைச் சொல்லுபவருக்குத் துன்பம் வராது. வறுமை அண்டாது என்பதைவிட, அவர் பேசிவரும் இனிய சொற்களால் வந்தவரது துன்பம் அழியும் மனம் சுகம் பெறும் சொர்க்க நிலையான இன்பம் மிகுதியாகும் என்பதுதான் சிறந்த பயனாக இருக்கும். ஆகவே, 4 வது குறளில் இன்சொல்லின் ஏற்றமிகு பயனை வள்ளுவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.