138 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற
பொருள் விளக்கம்: பணிவு = (பணி + உ) உள்ளும் புறமும் கொண்டாற்றுகிற உடையன் = பண்பு உடையவன் இன்சொலன் - இனிய சொற்களை உடையவன் ஆதல் என்று காட்சி தருகின்ற அழகே ஒருவற்கு இல்லறம் நடத்துகிற ஓர் அறனுக்கு அணி பெருமை தருவதாகும். (அழகானது) மற்றுப் பிற அல்ல = மற்ற எந்த அழகும் ஒழுக்கமும் பெருமை தருவது அல்ல. (பெருமைதராது). சொல் விளக்கம்: பணி ஈகை, தொண்டு; உ - அகமும் புறமும்; ஆதல் = தரிசனம், மிகுதியாதல்; அணி = பெருமை, அழகு, ஒழுங்கு: முற்கால உரை:
இன்சொல் உடமையும் பணிவுடமையும் ஒருவற்கு நல்ல அணிகளாகும்.
தற்கால உரை:
இன்சொல் லே ஒருவனுக்குச் சிறந்த அணிகலனாக விளங்குவதாகும். புதிய உரை:
உள்ளும் புறமும் மகிழத் தொண்டாற்றுகிற பண்பும், இனிய சொல் பேசுகிற அன்பும் கொண்டு, காட்சி தருகிற அறனுக்கு அவையே பெருமை சேர்க்கும். வேறு எதுவும் அதற்கு ஈடில்லை. விளக்கம்:
பணிவுடமை என்பது தாழ்ந்து போய் வணங்குவது இல்லை. பெறுபவர் அகமும், புறமும் மகிழ ஈவதும் பணிபுரிவதும், அப்படியே பெரும்பாலும் வருவோர்க்குத் தரிசனம் தருகிற அழகானவன், ஒழுங்கு மிகுதியானவன். அந்த அழகும், அன்பும் தான் அறனுக்குப் பெருமை. மற்ற செல்வங்கள் எல்லாம் பெருமை தருவன அல்ல.
5வது குறளில் இன்சொல்லின் வல்லமை எவ்வளவு என்பதை மேன்மைப் படுத்திக் காட்டுகிறார் வள்ளுவர்.
பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/141
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
