பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 139 - - 96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் பொருள் விளக்கம்: அறம் நாடி = ஒழுக்கமான ஞானத்தை ஆராய்ந்து இனிய சொலின் = இனிமையாகப் பேசினால் அல் = தீவினை (செய்கிற) அல்லது மயங்கித்திரிகிற அவை = மக்கள் கூட்டம்; தேய = குறைய நல்அவை = மேன்மைமிகு உயர்ந்தோர் தொகை. பெருகும் = மிகுதியாகும். சொல் விளக்கம்: அல் = மயக்கம், தீவினை; அவை = கூட்டம், உயர்ந்தோர் சபை அறம் = ஒழுக்கம், ஞானம்; நாடி = ஆராய்ந்து; - முற்கால உரை: ஒருவன் இன்சொற் சொல்லுவானாகில் பாவம் குறைந்து புண்ணியம் வளரும். தற்கால உரை: ஒருவன் இனிய சொற்களைச் சொல்லும்போது அவனுடைய தீமைகள் அகலவும், நன்மைகள் பெருகவும் வழி ஏற்படும். புதிய உரை: அறனானவன் ஒழுக்கம் சார்ந்த ஞானத்தை ஆராய்ந்து இனிமையாகப் பேசுகிறபோது, தீ வினை செய்கிற கூட்டம் குறைந்து மேன்மைமிகு உயர்ந்தோர் சபையாகப் பெருகி வளரும். விளக்கம்: அல்லவை நல்லவை என்னும் இடத்தில் என் பொருள் மாறுபடுகிறது. அறிவில்லாமையால் மயக்கத்திலும் நலம்போக்கும் நீசச் செயல்களிலும் உழல்வோர், ஒழுக்கம் பற்றிய உயர்ந்த ஞானத்தை இனிமையான சொற்கள் மூலமாய்க் கேட்கிறபோது, அவர்கள் மோச வாழ்வு மாறுகிறது. மனம் தேறுகிறது. உயர்ந்தோராக வாழ்கிற வாய்ப்பும் பெருகுகிறது. இனியசொல் குணத்தையும் மாற்றும். மக்கள் மனத்தையும் மாற்றும் வல்லமை உடையது என்று 6 ம் குறளில் கூறுகிறார்.