பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


140 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் பொருள் விளக்கம்: நயன்ஈன்று = மகிழ்ச்சியை உண்டாக்கி நன்றி பயக்கும் = ஒழுக்கத்தைப் பிறப்பிக்கின்ற பயன்ஈன்று = வாழ்க்கையை வழங்குகிற பண்பு = பாடறிந்து ஒழுகிடும் செயல் நன்மையின் தலைப்பிரியா = பெருமை பிறழாமல் இருப்பதே சொல் = இனிய சொல்லாகும். சொல் விளக்கம்: நயன் - இன்பம், மகிழ்ச்சி, நன்மை; ஈன்று = உண்டாக்குதல் நன்றி = அறம், ஒழுக்கம், ஞானம், உதவி; பயன் செல்வம், வாழ்க்கை; செயல் = நன்மை, நற்குணம் தலை = பெருமை; பிரியா = விலகாத, நீங்காத முற்கால உரை: இனிய சொற்களானவை நீதியையும் தருமத்தையும் தரும். தற்கால உரை: இனிய சொற்கள் ஒருவருக்கு எப்பொழுதும் நன்மையையும் பயக்கும். இன்பத்தையும் தரும். புதிய உரை: இனிய சொல்லின் இலக்கணமாவது மகிழ்ச்சியை உண்டாக்கி, ஒழுக்கத்தைபட் பிறப்பிக்கிற வாழ்க்கையை வழங்குகிற செயல் நன்மையை, தொடர்ந்து பெருமை குன்றாமல் வழங்குவதாகும். விளக்கம்: இனியசொல் என்பது கேட்பவரை மகிழ்விப்பது மட்டுமல்ல. அவரது தீவினைகளைத் தீய்த்து விடவும், மேன்மை நிலையை எய்தி விடவும் உதவுகிறது என்று 6 வது குறளில் கூறிய வள்ளுவர். 7வது குறளில் அந்த இனியசொல் ஒழுக்கமான வாழ்க்கையையே உண்டாக்கும் வல்லமை பெற்றிருக்கிறது என்று இலக்கணம் வகுத்துக் காட்டுகிறார். இனிய சொல்லுக்குரிய ஈடற்ற ஆற்றலை இக்குறள் வெளிப்படுத்துகிறது.