பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 141 - - 98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் பொருள் விளக்கம்: இன்சொல் = இனிய சொல்லானது சிறுமையுள் = துன்பம் தருகிற நோய், வறுமை, வியாதி போன்றவற்றையும் நீங்கிய மறுமெய்யும் = குற்றம் மாசு போன்றவை நீங்கிய உடலையும் இம்மையும் = அதனால் இந்த உலகில் பெறுகிற எல்லா இன்பத்தையும்; தரும் = தருகிறது சொல் விளக்கம்: மறு = குற்றம், மாசு = மெய் உடல் சிறுமை = துன்பம், நோய், வறுமை, வியாதி இம்மை = இகபோகம், இந்த உலகம், இப்பிறப்பு முற்கால உரை: இன் சொற்களானவை இருபிறப்பிலும் இன்பத்தைத் தரும். தற்கால உரை: இனிய சொற்கள் இப்போதும் சரி, பின்னர் எப்போதும் சரி இன்பம் பயக்கும். புதிய உரை: இனிய சொல்லானது, துன்பம் தருகிற நோய், வறுமை போன்ற மாசுகள் நீங்கிய உடலைத் தந்து, அதனால் இந்த உலகத்தில் கிடைக்கிற எல்லா இன்பங்களையும் தருகின்றது. விளக்கம்: மனம் மகிழ்ச்சியும் எழுச்சியும் பெறுகிறபோது இயல்பாகவே உடலும் நன்கு செழிப்படைகிறது. செழித்த உடலுக்குள் நலமும் பலமும் வளமும் கொழிக்கும். அதனால் வாழ்வும் எல்லாவித இன்பங்களையும் பெற்று பேரின்பம் கொள்கிறது. எட்டாவது குறளில் இன்சொல் தரும் இனிய பயன்கள் வாழ்வை எப்படியெல்லாம் உயர்த்தி வழிகாட்டுகிறது என்று கூறுகிறார் வள்ளுவர்.