பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

},12 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - - - - - - - o - இலக்கிய முயற்சியில் பண்டிதர்கள் எழுதும் தூய தமிழ் போல் என் நடை இருக்காது. பாமரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்-பின்பற்ற வேண்டும் என்பதற்காகப், பழகிய தமிழில் எழுதியிருக்கிறேன். வேற்று மொழிச் சொற்கள், எழுதுகிறபோது என்னை அறியாமல் வந்து விழுந்திருக்கும். அதனால் படிப்பவர்களுக்கு எளிதாகப் புரிய வைக்க முடியும் என்பதும் ஒரு நம்பிக்கை. அதற்கான தூய தமிழ்ச் சொற்களும் எனக்குத் தெரியாத சூழ்நிலையும் இருக்கலாம். ஆகவே, உரையெழுதும் வரிசையில் வரும் இளையவனான என்னிடம், குணம் நாடவேண்டும். குற்றமும் காண வேண்டும். அதில் சிறப்பானதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்னும் என் அன்பான விளக்கத்துடன், அறிவார்ந்த வணக்கத்துடன் உரையைத் தொடங்குகின்றேன். அன்புடன் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா