பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 149 - - 105. உதவி வரைத்துஅன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து பொருள் விளக்கம்: உதவி =துணை, கொடை அல்லது ஒத்தாசை போன்று செய்கிற உதவி வரைத்து = உதவியின் அளவு அன்று = அந்த நேரத்தில் (தேவையான சமயத்தில்) செயல்பட்டார் = செயல்புரிந்து செய்தவரின் சால்பின் வரைத்து = பண்பான சான்றாண்மையை பொறுத்தே உதவி = உதவியாக அமையும் சொல் விளக்கம்: உதவி =துணை, கொடை, ஒத்தாசை வரைத்து = அளவு, மலை அன்று = அந்நாள்; சால்பு = பண்பு, சான்றாண்மை முற்கால உரை: உதவிக்கு அளவில்லை. உதவி செய்யப் பெற்றுக் கொண்டவர் தகுதியளவே அளவாம். தற்கால உரை: ஒருவன் செய்த உதவி அந்த உதவியின் அளவைப் பொறுத்து அல்ல. அந்த உதவியைப் பெற்றவரின் பண்பின் அளவைப் பொறுத்தே அமையும். புதிய உரை செய்த உதவியின் அளவானது, தேவைப்படுகிறவருக்கு அந்த நேரம் செய்பவரின்பண்பு ஒழுக்கம் சான்ற ஒத்தாசையைப் பொறுத்தே அளவிடப்படும். விளக்கம்: உதவியதற்காகவே ஒர் உதவியின் அளவு மதிப் பிடப்படுவதில்லை. தேவையை அறிந்து உதவுகிறவரின் பண்பான உதவி ஒழுக்கமான உதவியாகத், தேவையானவர்க்குத் தேவைப்படுகிற சமய சந்தர்ப்பம் இவற்றை வைத்தே, உதவியின் அளவு உணரப்படுகிறது. இந்தக் குறளில் 3 முறை உதவி என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அன்று உதவி, செயல்பட்டார் உதவி, விரைந்து உதவி என்று மூன்று பகுதியாகப் பிரித்து உதவியின் தன்மையை நுண்மையாக விளக்குகிறார்.