பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 15.3 புதிய உரை: பிறரது அன்பால் பெற்ற இன்பத்தை வாழ்வில் மறப்பது நல்லதல்ல. ஆனால் , அந்தச் சுகத்தை அழிக்கக்கூடிய தீவினைகள் எதையும் இதயத்திலிருந்து அப்பொழுதே அகற்றி விடுவது நல்லது. விளக்கம்: மனம் உடல் இயல்பான சூழ்நிலையில். நல்லதை நினைத்துக் கொண்டு இருக்கிறபொழுது சுவாசம் இயற்கையாக இதமாக இருக்கும். நல்லது அல்லாதவற்றை நினைக்கிற பொழுது சுவாசம் தடைபட்டு பிறகு ஒழுங்கு கொள்கிறது. ஒரு நொடியில் ஏற்படுகிற சுவாசத் தடுமாற்றத்தால், இரத்த ஒட்டம் தடுமாற, அதனால உடல் முழுதும் ஏற்படுகிற தடைபட்ட குருதி ஒட்டம், அதனால் ஏற்படுகிற உட்புற விளைவுகள் உடலை நோகடித்து விடுகிறது. அதனால், நல்ல அன்பு செயல்களை வாழ்க்கை முழுவதும் வைத்துக்கொள். துன்ப நிகழ்ச்சிகளை உடனே துரத்திவிடு என்று உடலியல் பண்புகளை இந்தக் குறளில் விளக்குகிறார். தீமை செய்பவர்கள், செய்ய நினைப்பவர்கள் முகம், இருளாகிவிடுவது இப்படிச் சுவாசம் கெடுவதால் தான் என்று உடலியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்று நன்றுள்ளக் கெடும் பொருள் விளக்கம்: கொன்று அன்ன - மனச்சிதைவு, உடல் இழப்பு போன்று இன்னா = கீழ்மையான துன்பங்கள் நேர்கிறபோது அவர் = பண்பாளராகியவர்களின் செய்த - பேராண்மை மிக்க உதவும் செயலானது ஒன்றுள்ள - உண்மையாகப் பொருந்தும்படி அமைந்து செயினும் = வென்று கெடும் கெடுத்து அழித்துவிடும். சொல் விளக்கம்: கொன்று = சிதைத்து; இன்னா = கீழ்மையான துன்பம் தருகிற உள்ள உண்மையான, ஒன்று = பொருந்துகிற செய்த பேராண்மை, மிக்க செயல் என்ற சொற்களை வள்ளுவர் மிக அருமையாக இங்கே கையாண்டு, விரும் பி நன்மை செய்வோரின் உண்மையான போாண்மையை 9 வது குறளில் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.